நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 24, 2019
TNPSC Group 4 OnlineTest
Series 2019
முக்கியமான நாட்கள்
ஆகஸ்ட் 24 – சர்வதேச விசித்திர இசை தினம்
- சர்வதேச விசித்திர இசை தினம் ஆகஸ்ட் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இதை நியூயார்க் நகர இசைக்கலைஞர் பேட்ரிக் கிராண்ட் உருவாக்கினார். இந்த நாள், மக்கள் இதற்கு முன்பு அனுபவிக்காத இசை வகைகளை கேட்பதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
‘மிஷன் ரீச் அவுட்’
- ஜம்மு-காஷ்மீரில்,” மிஷன் ரீச் அவுட்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக”,இந்தியா ராணுவம் லாப்ரி டாப் கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கும், ஜம்மு பிரிவின் ரியசி மாவட்டத்தின் அருகிலுள்ள கிராமங்களுக்கும் கையடக்கமான சூரிய விளக்குகளை வழங்கியது . இந்த கிராமங்களுக்கு குறைந்த அளவு மின்சார வசதி இருந்ததால், சூரிய விளக்குகளை விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது மேலும் இதுவரை மொத்தம் 180 கையடக்கமான சூரிய விளக்குகள் இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளன.
FSSAI இன் தேசிய உணவு ஆய்வகம
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அதிநவீன தேசிய உணவு ஆய்வகம் என்.சி.ஆர் காசியாபாத்தில் திறக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சர் FSSAI யின் அதிநவீன தேசிய உணவு ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் “இந்தியாவில் உணவு ஆய்வகங்கள்: ஒரு மெட்டா ஆய்வு” என்ற அறிக்கையை வெளியிட்டு 13 தேசிய குறிப்பு ஆய்வகங்களுக்கு அங்கீகார சான்றிதழை வழங்கினார்.
பிரான்சில் இரண்டு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதின் நினைவாக நினைவுச்சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
- பிரான்சின் மோன்ட் பிளாங்க் மலையின் அடிவாரத்தில் இரண்டு ஏர் இந்தியாவிமானம் விபத்துக்குள்ளானதின் நினைவாக ஒரு நினைவுச்சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார், இதில் இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் ஹோமி ஜே.பாபா உட்பட பல இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
- 1950 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் விபத்துக்குள்ளான இரண்டு ஏர் இந்தியா விமானங்களின் பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவரான பாபா மற்றும் பல இந்தியர்களுக்காக மோன்ட் பிளாங்க் மலையின் அடிவாரத்தில் உள்ள நிட் டி ஏகிள் என்ற இடத்தில் நினைவுச்சின்னம் அர்ப்பணிக்கப்பட்டது.
சர்வதேச செய்திகள்
இந்தியா, பிரான்ஸ் கப்பல்களின் செயற்கைக்கோள் கண்காணிப்பைத் திட்டமிட்டன
- இந்தியாவும் பிரான்சும் சுமார் 10 பூமியின் தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள்களின் தனித்துவமான தொகுப்பை உருவாக்கி ஏவவுள்ளன, அவைகள் தொடர்ந்து கடல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும். இந்த குறைந்த தாழ்வான சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பயங்கரவாதம், திருட்டு, கடத்தல், எண்ணெய் கசிவுகளின் ஆதாரம் ஆகியவற்றை கண்காணிக்கும்.
விண்வெளி அறிவியல்
2022 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டமான ககன்யான்
- 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டமான ககன்யானில் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களுக்கு விண்வெளி உடைகள், குழு இருக்கைகள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கான ஜன்னல்கள் வழங்குவது குறித்து இந்தியாவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோஸ்கோஸ்மோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் ரஷ்ய விண்வெளி ரோஸ்கோஸ்மோஸின் துணை நிறுவனமான கிளாவ்கோஸ்மோஸ் இடையே ஜூன் 27 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நான்கு இந்தியர்கள் யூரி ககரின் காஸ்மோனாட் மையத்தில் பயிற்சி பெறவுள்ளனர்.
மாநாடுகள்
கருணைக்கான முதல் உலக இளைஞர் மாநாடு
- யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி அமைதி மற்றும் நிலையான அபிவிருத்திக்கான கல்வி நிறுவனம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள கருணை குறித்த முதல் உலக இளைஞர் மாநாட்டை இந்திய குடியரசு தலைவர் ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் புதுடில்லியில் உள்ள விஜியன் பவனில் தொடங்கி வைத்தார்.புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்
விருதுகள்
போஷான் அபியான் விருதுகள்
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 2018-19 ஆம் ஆண்டிற்கான போஷன் அபியான் விருதுகளை புதுடில்லியில் நடந்த விழாவில் வழங்கினார்.ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் – சண்டிகர், தமன் & டியு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவற்றுக்கு நடத்தை மாற்றம் மற்றும் சமூக அணிதிரட்டளுக்காக 23 சிறந்த விருதுகள் வழங்கப்பட்டன.
உள்நாட்டு பாதுகாப்பு 2019 மாநாட்டில் ஸ்மார்ட் பாலிசிங் விருதுகள்
- டாக்டர் ஜிதேந்திர சிங் உள்நாட்டு பாதுகாப்பு 2019 மாநாட்டில் ஸ்மார்ட் போலிசிங் விருதுகளை வழங்கினார். கிளர்ச்சி எதிர்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, குற்ற விசாரணை மற்றும் வழக்கு, சைபர் குற்ற மேலாண்மை, அவசரகால பதில், மனித கடத்தல், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை, ஸ்மார்ட் காவல் நிலையம் போன்ற துறைகளில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு 35 ஸ்மார்ட் பாலிசிங் விருதுகள் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு செய்திகள்
சர்வதேச விமான மற்றும் விண்வெளி நிகழ்ச்சியான MAKS 2019
- சர்வதேச விமான மற்றும் விண்வெளி நிகழ்ச்சியான MAKS 2019 ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து பாதுகாப்பு மற்றும் விண்வெளி மேஜர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பங்கேற்கவுள்ளது
தரவரிசை & குறியீடுகள்
கூட்டு நீர் மேலாண்மை அட்டவணை 2.0
- நிதி ஆயோக் இரண்டாவது சுற்று கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை (சி.டபிள்யூ.எம்.ஐ 2.0) தயாரித்துள்ளது .இந்த அறிக்கையை ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத் மற்றும் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் ஆகியோர் வெளியிட்டனர்.
- வெளியிடப்பட்ட அறிக்கையில், (2017-18) ஆண்டில் குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது, அதனைத் தொடர்ந்து ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கோவா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில், இமாச்சலப் பிரதேசம் 2017-18 ஆம் ஆண்டில் முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து உத்தரகண்ட், திரிபுரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
விளையாட்டு செய்திகள்
வில்வித்தை உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டி 2019
- ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்த வில்வித்தை உலக இளைஞர் சாம்பியன்ஷிப்பில், ஜூனியர் காம்பவுண்ட் ஆண்கள் அணி போட்டியில் சுக்பீர் சிங், சங்கம்பிரீத் சிங் பிஸ்லா மற்றும் துஷார் பட்தரே ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
PDF Download
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்