நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 7 & 8, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 7 & 8, 2019

முக்கிய தினம்:

ஏப்ரல் 7 – உலக சுகாதார நாள்

  • 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. சுகாதார நடவடிக்கைகளை அறிந்து உடல்நலப் பிரச்சினையின்றி துல்லியமாக தங்கள் பணிகளை நிறைவேற்ற  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2019 உலக சுகாதார நாள் கருப்பொருள்: Universal health coverage: everyone, everywhere

நியமனங்கள்:

புதிய கடற்படைத் தலைவர் வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங்

  • இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங் நியமிக்கப்பட உள்ளதால் அவரின் ஆயுதப்படைத் பதவி, பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த ஆண்டு மே 31 ம் தேதி இந்திய கடற்படையின் அட்மிரல் சுனில் லன்பாவின் மூன்று வருட கால பதவி நிறைவடைவதால், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங் பதவியேற்க உள்ளார்

உலக ஹோமியோபதி தினத்தின் சர்வதேச மாநாடு

  • உலக ஹோமியோபதி தினத்தையொட்டி புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2019 ஏப்ரல் 9,10 ஆகிய இரண்டு நாட்கள் உலக ஹோமியோபதி தினத்தின் சர்வதேச மாநாட்டை ஹோமியோபதியின் மத்திய ஆராய்ச்சி மையம் (CCRH) ஏற்பாடு செய்துள்ளது.
  • ஹோமியோபதி முறையின் நிறுவனரான டாக்டர் கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிச் சாமுவேல் ஹன்மான்மன் பிறந்த நாள் நினைவாக உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.

 தேசிய நிகழ்வுகள்

காங்க்லா டோங்ப் போரின் 75வது நினைவு நாள் அனுசரிப்பு

  • 07 ஏப்ரல் 2019, காங்க்லா டோங்ப் போர் நினைவகத்தில் இராணுவத் துறையினரால் 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

காராகோரம் பாதையில் முதல் மோட்டார் சைக்கிள் பயணம்

  • கார்கில் விஜய் தீவாஸ் இன் 20 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, லெ முதல் கரகோரம் பாஸ் வரை 1,000 கி.மீ. வரை நீடிக்கும் முதல் மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்கப்பட்டது.

வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

டாடா ஸ்டீல் 2019 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த உற்பத்தியை வெளியிட்டுள்ளது

  • பூஷன் ஸ்டீல் வாங்கிய பிறகு டாடா ஸ்டீல் கடந்த ஆண்டை விட 46 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 2019 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த உற்பத்தியாக 4.47 மில்லியன் டன்கள் உற்பத்தியை அடைந்துள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்புகள்:

பாக்டீரியாவை பயன்படுத்தி நச்சுத்தன்மையிலிருந்து நறுமணமுள்ள கலவைகளை பிரிக்கும் யுக்தி கண்டுபிடிப்பு

  • பெட்ரோலியம் பொருட்களால் மாசுபட்ட மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியத்தின் தனித்துவமான திரிபுகளைப் பயன்படுத்தி, ஐ.ஐ.டி பம்பாய் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுசூழல் நச்சுத்தன்மையிலிருந்து, பென்சோயேட் (சோடியம் பென்சோயேட் உணவுப் பாதுகாப்ப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது), பென்சில் ஆல்கஹால் மற்றும் நப்தலைன் போன்றவற்றை பிரித்தெடுக்கும் யுக்தியை கண்டுபிடித்துள்ளனர்.

 17 அடி நீளமான பைத்தான்  (மலைபாம்பு) புளோரிடாவில் கைப்பற்றப்பட்டது

  • புளோரிடா மாகாணத்தில் விஞ்ஞானிகள் 17 மீட்டர் நீளம் கொண்டிருக்கும் ஒரு பெண் பைத்தான் (மலைபாம்பை) பிடித்துள்ளனர், இது பிக் சைப்ரஸ் தேசிய பாதுகாப்பிலிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு பாம்பு ஆகும்.

பாதுகாப்பு நிகழ்வுகள்:

இந்திய இராணுவம் ஏகே -203 ரக துப்பாக்கியை சோதனை செய்ய முடிவு

  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.-203 ரக தாக்குதல் துப்பாக்கிகளை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஏ.கே.-203 தாக்குதல் துப்பாக்கி ஆயுதப்படை தொழிற்சாலை வாரியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள கூட்டு முயற்சியில் உத்தரபிரதேசத்தின் அமேதி உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும்.

பிரம்மோஸ் ஏவுகணை வீச்சு 400 கிமீ இருந்து 500 கிமீ வரை அதிகரிக்க முடிவு

  • ரஷ்யா மற்றும் இந்தியா கூட்டு சேர்ந்து தயாரிக்கப்படும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வீச்சு வரம்பை 400 கிமீ இருந்து 500 கி.மீ. (311 மைல்கள்) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 & 8 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!