நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 20, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 20, 2019

முக்கிய தினம்:

ஏப்ரல் 20 – சீன மொழி தினம்

  • சீன மொழி தினத்திற்கான தேதி குயுவிலிருந்து (“ரெயின் ஆஃப் மில்லட்”) தேர்ந்தெடுக்கப்பட்டது, இது பாரம்பரிய கிழக்கு ஆசிய நாள்காட்டிகளில் 24 சூரிய காலத்தின் 6 வது இடமாகும். இது காங்க்ஜிக்கு அஞ்சலி செலுத்தும்படி அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழியாக சீன மொழி 1946ல் நிறுவப்பட்டது.

தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசம்

கிழக்கு கோதாவரியில் உள்ள நெல் விவசாயிகள் பாதிப்பு

  • நெல் கொள்முதல் மையங்களை (பிபிசி) நிறுவுவதில் தாமதம் மற்றும் ‘போண்டலு’ (MTU-3626) நெல் சாகுபடிக்கு சந்தை இல்லாத நிலையால், தற்போதைய ராபி பருவத்தில் கிழக்கு கோதாவரி மாவட்ட விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச செய்திகள்

இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீட்டை 2 லட்சமாக சவுதி அரேபியா அதிகரித்துள்ளது

  • சவுதி அரேபியா இந்தியாவின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபது ஆயிரத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்து ஒரு முறையான உத்தரவை வழங்கியுள்ளது. இந்த ஹஜ் பயணிகள் ஒதிக்கீடு அதிகரிப்பின் மூலம் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பீகார் போன்ற பெரிய மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் இந்த ஆண்டு யாத்திரைக்கு செல்ல வழிவகுக்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் களை[வீட்] திருவிழா

  • தாய்லாந்து, பான் ராம் களை விழா எனும் அதன் முதல் களை விழாவை கொண்டாடுகிறது. 2018 ஆம் ஆண்டில் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கிய முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து ஆனது. கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து, தாய்லாந்து தாராளமயமாக்கலைத் தழுவிய அரசாங்கங்களின் வளர்ந்து வரும் பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேபாள பௌத்த மடம்இந்தியா மறு நிர்மாணம்  

  • நேபாளத்தில் சோய்ஃபேல் குண்டலிங்  என்ற பௌத்த மடத்தை இந்தியா மறு நிர்மாணம் செய்து கொடுத்துள்ளது. சிந்துபால் சௌக் மாவட்டத்தில், லிசாங்கு என்ற கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த மடத்தை ஷியால்பா டென்ஸின் ரின்போசே நேற்று திறந்து வைத்தார். இந்தியா அளித்த89 கோடி நேபாள ரூபாய் நிதியுதவியுடன் இந்த மடம் கட்டப்பட்டுள்ளது.

அறிவியல் செய்திகள்

தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு – WHO எச்சரிக்கை

  • உலகின் மிக மோசமான தொற்று நோய்களில் ஒன்றான, தட்டம்மையால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை. 2019ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், கடந்த ஆண்டு 2018ல் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 300% உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தகவல்.

பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது

  • கிட்டத்தட்ட 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான முதல் மூலக்கூறான ஹீலியம் ஹைட்ரைட் அயனை, நாசாவின் பறக்கும் வானூர்தியான சோபியா[SOFIA], நெபுலா அருகே கண்டறிந்துள்ளது. விஞ்ஞானிகள் முதல் தடவையாக விண்வெளியில் நமது பிரபஞ்சத்தின் மிக பழமையான வகை மூலக்கூறை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வணிகம் & பொருளாதாரம்

டொயாட்டா, சாப்ட்பேங்க் பண்ட் நிறுவனங்கள் உபெரில் $ 1 பில்லியன் முதலீடு

  • ஜப்பானின் மாபெரும் கார் நிறுவனமான டொயோட்டா மற்றும் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் சாப்ட்பேங்க் விஷன் ஃபண்ட், யுஎஸ் நிறுவனமான உபெரில் ஓட்டுநரில்லா சவாரி பகிர்தல் சேவைகளை மேம்படுத்துவதற்கான முன்னோக்கி செல்லும் திட்டத்திற்காக 1 பில்லியன் $ஐ முதலீடு செய்துள்ளனர்.

மாநாடுகள்

7வது சீன சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி ஷாங்காய் நகரில் தொடங்கியது

  • ஷாங்காய் நகரில் 7-வது சீன சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது, இந்த கண்காட்சி தேசிய அளவிலான  சர்வதேச தொழில்நுட்ப வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. 35,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தொழில்முறை தொழில்நுட்பங்கள், தொழில் நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் வர்த்தக சேவைகள் உள்ளிட்ட ஐந்து கண்காட்சிப் பகுதிகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பு செய்திகள்

யார்ட் 12706 அறிமுகம்

  • அட்மிரல் சுனில் லன்பா PVSM, AVSM, ADC கடற்படைத் தலைவர் பிராஜெக்ட் 15Bயின் மூன்றாவது கப்பல் கைடட் மிசைல் டெஸ்டிராயர் இம்பால்-ஐ, மும்பையின் Mazagon Dock Shipbuilders Limited இல், அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் உள்நாட்டு யுத்த கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டத்தின் அறிவிப்புகளில் குறிப்பிடத்தக்க மற்றொரு மைல்கல்லை இந்த அறிமுகம் குறிக்கிறது.

PDF Download

ஏப்ரல் 20 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!