நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 30 2018

0

நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 30 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 30 – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த நாள் விழா

  • அக்டோபர் 30 – இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் பாபா, பல முக்கிய நிறுவனங்களுக்கு அடித்தளத்தை அமைத்தார்.

தேசிய செய்திகள்

கர்நாடகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பிக் அப் மற்றும் டிராப் வசதி

  • கர்நாடக தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்கு பிக் அப் மற்றும் டிராப் வசதியளிப்பை ‘Chunavana’ மொபைல் செயலி மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த செயலியில் நவம்பர் 1 நள்ளிரவு வரை முன்பதிவு செய்யலாம்.

கேரளம்

இந்தியாவின் மிகப் பெரிய உலர் கப்பல் கட்டுமானத்துறைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

  • கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேரள மாநிலத்தில் கொச்சி கப்பல் துறைமுகத்தில் நாட்டின் மிகப்பெரிய உலர் கட்டுமானத்துறைக்கான அடிக்கல் நாட்டினார்.
  • இது 1,799 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடையும்.

சர்வதேச செய்திகள்

உலகம் முழுவதும் 100,000 மக்கள் காணாமல் போயுள்ளனர்: ICRC

  • செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, உலகெங்கிலும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் பதவி விலக திட்டம்

  • சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கெல் 2021 ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலக திட்டம்.

வணிகம் & பொருளாதாரம்

ஜப்பான் 316 பில்லியன் யென் இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடனளிக்க ஒப்புதல்

  • இந்தியாவில் ஏழு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 316 பில்லியன் யென் கடன் வழங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில், டெல்லி, வடகிழக்கு மற்றும் சென்னை ஆகியவை இதில் அடங்கும்.

மாநாடுகள்

பொது சுகாதார பராமரிப்பு பற்றிய 5வது தேசிய உச்சி மாநாடு

  • இந்தியாவில் பொது சுகாதாரத் திட்டத்தில் சிறந்த மற்றும் பிரதிபலன் சேவைகள், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த 5-வது தேசிய உச்சிமாநாட்டை மாநில முதலமைச்சர் திரு. சர்பானந்தா சோனாவால் முன்னிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா அசாம் மாநிலம், காஸிரங்காவில் தொடங்கி வைத்தார்.

இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாடு

  • புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • இத்தாலி பிரதமர் திரு. கியூஸெப் கோண்டேவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

நியமனங்கள்

  • நீதிபதி நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் – பாம்பே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

திட்டங்கள்

நமாமி கங்கே திட்டம்

  • நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ரூபாய் 929 கோடி மதிப்புள்ள பன்னிரெண்டு திட்டங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. 580 கோடி ரூபாய் செலவில் 340 மில்லியன் லிட்டர் டன் கழிவுப்பொருள் உற்பத்தி திறன் கொண்ட டெல்லிக்கான இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா, கத்தார் கூட்டுக் கமிஷனை நிறுவ முடிவு

  • இந்தியா மற்றும் கத்தார் இரு நாடுகளின் பொது நலன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளில் தங்கள் உறவை வலுப்படுத்த ஒரு கூட்டுக் குழுவொன்றை நிறுவ முடிவு செய்துள்ளது.

மாசுபாட்டை கட்டுப்படுத்த 15 ஆண்டு பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை தேசிய தலைநகரத்தில் இயக்க தடை செய்தது

  • சமீபத்திய காற்று மாசுபாடு காரணமாக 15 ஆண்டு பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை தேசிய தலைநகரத்தில் இயக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • தில்லியில் சாலைகளில் அத்தகைய வாகனங்கள் காணப்பட்டால் உடனடியாக அகற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றிக் கொண்டது

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் நேரம் அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதி இல்லை என அறிவிப்பு.

விளையாட்டு செய்திகள்

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்

  • மும்பையில் நடைபெற்ற 4 வது ஒருநாள் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இந்தியா, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் என்று முன்னிலை வகிக்கிறது.

ஐஸ்லே ஆஃப் மேன் சர்வதேச சதுரங்க போட்டி

  • இங்கிலாந்தில் நடைபெற்ற ஐஸ்லே ஆஃப் மேன் சர்வதேச சதுரங்க போட்டியில் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்சை வென்றார் கிராண்ட்மாஸ்டர் அதிபன். இதன்மூலம் மூன்றாவது இடம் பிடித்தார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!