நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 10 2018

0
165

நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 10 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 10 – உலக மன நல தினம்

 • உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ம் தேதி உலகம் முழுவதும் மனநல சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளின் ஒட்டுமொத்த நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செய்திகள்

அரியானா

தீன் பந்து சர் சோட்டு ராம் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்

 • பிரதமர் நரேந்திர மோடி ரோஹ்தக் நகர் சாம்பலாவில் தீன் பந்து சர் சோட்டு ராம் சிலையை திறந்து வைத்தார்

உத்தரகண்ட்

மாநிலத்தின் முதல் மின்சார பேருந்தின் சோதனை ஓட்டம்

 • உத்தரகண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் மாநிலத்தின் முதல் மாசற்ற மின்சார பேருந்தின் சோதனை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தெலுங்கானா

கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஹர்ஷா

 • ஹர்ஷா பரத்கோடி தெலுங்கானாவின் இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் ஆனார்

சர்வதேச செய்திகள்

ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம்

 • இலங்கை ரூபாய் மதிப்பில் 30 கோடி செலவில் இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம் இலங்கையில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அறிவியல் செய்திகள்

சூறாவளிப் புயல் திட்லி

 • மேற்கு மத்திய வங்கக்கடலில் சூறாவளிப் புயல் ‘டிட்லி’ கடுமையான சூறாவளி புயலாக வலுவடைந்தது.

மாநாடுகள்

SCO இன் 17 வது CHG கூட்டம்

 • துஷன்பே, தஜிகிஸ்தான் நகரில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 வது அரசாங்கத் தலைவர் கவுன்சில், CHG, கூட்டத்தில் பங்கு பெறுகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

நியமனங்கள்

 • துஷார் மேத்தாஇந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல்
 • சுனில் பாஸ்கரன்புதிய ஏர் ஆசியா இந்திய தலைவர்

திட்டங்கள்

அனைத்து பெண் நிர்வகிக்கப்படும் வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டம்

 • சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடிகளிலும் பெண் நிர்வகிக்கப்படும் வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

 • ரயில்வே அமைச்சகம், 12 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்தது.

அடுத்த ஆண்டு குருநாகக் தேவின் 550 வது பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாட திட்டம்

 • அடுத்த ஆண்டு குருநாகக் தேவின் 550 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை உலகம் முழுவதும் கொண்டாட திட்டம். புதுடில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான தேசிய செயல்பாட்டுக் குழுவின் உயர் மட்ட கூட்டத்தில் இந்த முடிவை எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு செய்திகள்

உயர் தர இராணுவ ட்ரோன்கலை பாகிஸ்தானுக்கு விற்க சீனா திட்டம்

 • 48 உயர்தர இராணுவ ட்ரோன்களை அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா விற்க திட்டம்.

விளையாட்டு செய்திகள்

ஆசிய பாராவிளையாட்டு

 • ஹர்விந்தர் சிங் ஆண்கள் தனி ரீகர்வ் பிரிவில் [வில்வித்தை] தங்கம் வென்றார். ஆடவர் வட்டு எறிதல் போட்டி F11 பிரிவில் மோனு கங்காஸ் வெள்ளி வென்றார், முகம்மது யாசீர் ஆண்கள் குண்டு எறிதல் F46 பிரிவில் வெண்கலத்தை வென்றார்.
 • நாராயண் தாகூர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில், தூப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனிஷ் நர்வால் தங்கம் வென்றனர்.
 • ஆண்கள் வட்டு எறிதலில் சுரேந்தர் அனீஷ் குமார், ராம் பால் ஆண்கள் உயரம் தாண்டுதலில் மற்றும் குண்டு எறிதலில் விரேந்தர் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

சுல்தான் ஜோகர் கோப்பை

 • மலேசியாவில் சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஜூனியர் அணி தகுதி பெற்றது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here