நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 9,10 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 9,10 2018

முக்கியமான நாட்கள்

டிசம்பர் 9 – சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

  • 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி ஊழல் எதிர்ப்புக்கு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் தடுப்பு மாநாட்டின் படி, டிசம்பர் 9 அன்று சர்வதேச எதிர்ப்பு ஊழல் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம்

  • மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 1948 ல், மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தை நிறைவேற்றிய நாளாகும்.
  • 2018 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் தினம் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் 70 வது ஆண்டு நிறைவை குறிக்கும்.

தேசிய செய்திகள்

கேரளா

கண்ணூர் சர்வதேச விமான நிலையம் செயல்படத் தொடங்கியது

  • மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் இணைந்து கேரளாவில் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தை-KIAL துவக்கி வைத்தனர். 

சர்வதேச செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஃபெடரல் நேஷனல் கவுன்சிலில் பெண்கள் பிரதிநிதித்துவம் இரட்டிப்பு

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி மூலம் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை, பெடரல் நேஷனல் கவுன்சிலில் (Women’s Representative) பெண்கள் பிரதிநிதித்துவத்தை நடப்பு5 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக வரும் பாராளுமன்ற காலப்பகுதியில், அதிகரிக்க முடிவு.

வணிகம் & பொருளாதாரம்

2018-19ற்கான மொத்த நேரடி வரி வசூல்

  • இந்த ஆண்டு நவம்பர் வரை 2018-19 ஆம் ஆண்டிற்கான நேரடி வரி வசூலின், மொத்த சேகரிப்புகள்75 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் மொத்த சேகரிப்புகளை விட 15.7 சதவிகிதம் அதிகமாகும்.

நிறைவு சான்றிதழை கொண்ட வளாகங்கள் மற்றும் குடியிருப்பு விற்பனைக்கு ஜிஎஸ்டி இல்லை

  • பூர்த்தி செய்யப்பட்ட நிறைவு சான்றிதழை கொண்ட வளாகங்கள் மற்றும் குடியிருப்பு விற்பனைக்கு ஜிஎஸ்டி இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

ஸ்டார்ட் அப்களுக்கான பட்டியலிடும் நெறிமுறைகளை செபி தளர்த்த முடிவு, புதுவையாளர்களின் வளர்ச்சி பிளார்ட்பார்மை மறுபெயரிட முடிவு

  • ஜூன் மாதத்தில் ஸ்டார்ட் அப்களை மதிப்பாய்வு செய்ய இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.

மாநாடுகள்

நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு

  • மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை ஆதரவுடன், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம், மொஹாலியில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளி வளாகத்தில் 2018 டிசம்பர் 10-11 முதலாவது சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘நீடித்த நீர் மேலாண்மை’ என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாகும்.

இந்தியரஷ்ய பாராளுமன்ற ஆணையத்தின் 5 வது கூட்டம்

  • ரஷ்ய பாராளுமன்ற ‘டுமா’வின் தலைவர் இந்தியா, ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் மகத்தான திறனை முழுவதுமாகத் தக்கவைக்க சட்டமியற்றும் கட்டமைப்பை ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இது இரு நாட்டிற்கு இடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் பயனுள்ள பாராளுமன்ற பரிமாற்றங்களுக்கும் அழைப்பு விடுத்தது.

அறிவியல் மையம் மற்றும் அருங்காட்சியகங்களின் தலைமையின் 18 வது அகில இந்திய ஆண்டு மாநாடு

  • விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நாட்டிலுள்ள மற்ற அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைக்கவும் அறிவியல் மையம் மற்றும் அருங்காட்சியக தலைமையின் 18 வது அகில இந்திய ஆண்டு மாநாடு துவங்கியது.
  • அருணாச்சல பிரதேச அறிவியல் மையத்தில் அமைந்துள்ள “புதுமை மையம் மற்றும் விண்வெளி கல்வி மையம்”, இட்டாநகரில் திறந்துவைக்கப்பட்டது.

நல் ஆளுகைவிருப்ப மாவட்டங்கள் மீது கவனம் செலுத்துதல்பற்றிய மண்டல மாநாடு

  • மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை, கேரள அரசுடன் இணைந்து நடத்தும், ‘நல் ஆளுகை – விருப்ப மாவட்டங்கள் மீது கவனம் செலுத்துதல்’ பற்றிய மண்டல மாநாடு, திருவனந்தபுரத்தில் 2018 டிசம்பர் 10-11 நடைபெறுகிறது. கேரள ஆளுநர் நீதிபதி (ஓய்வு) திரு.பி.சதாசிவம், இந்த இரண்டு நாள் மாநாட்டை நாளை தொடங்கிவைக்கிறார்.

பங்குதாரர்களின் கருத்துக்களம் 2018

  • உடல்நலம், குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் வளர்ச்சிக்கான பங்குதாரர்கள் ஒன்றிணைந்து ஒரு உத்தியோகபூர்வ பக்க நிகழ்வான பங்குதாரர்களின் கருத்துக்களம் 2018-ஐ, ப்ரீத்தி சுதன், செயலாளர் (HFW), ‘இந்தியா தினத்தை’ தொடங்கி வைத்தார். 

பாதுகாப்பு செய்திகள்

அக்னி V வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

  • அக்னி V, ஒரு நீண்ட தூர மேற்பரப்பு – மேற்பரப்பு அணு திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, வெற்றிகரமாக ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் சோதனை செய்யப்பட்டது.

இந்த்ரா கடற்படை 2018 போர்ப்பயிற்சி

  • இந்திய கடற்படை மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் கடற்படை இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 10-வது இந்த்ரா கடற்படை போர்ப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, ரஷ்யக் கூட்டமைப்பின் கடற்படை கப்பல்கள் வருகை.

ஏவியாஇந்த்ரா 2018

  • இந்திய விமானப்படை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் வான்படையும் இணைந்து ஏவியாஇந்த்ரா என்ற பெயரில் பணி சார்ந்த சிறப்பு போர்ப்பயிற்சியை, ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 2018 டிசம்பர் 10-21 வரை நடத்த திட்டமிட்டுள்ளன.

விருதுகள்

  • உலக அழகி 2018 – மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன்.
  • சாகித்திய அகாடமி விருது – ஸ்ரீ ஷியாம் சுந்தர் பெஸ்ரா, டிக்கெட் தலைமை ஆய்வாளர் [சாந்தலி மொழியில் நாவல் “மரோம்”]

விளையாட்டு செய்திகள்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு

  • ஜனவரி 9 முதல் 20 வரை புனேயில் கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்

  • முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை

  • இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அந்தந்த குழுக்களின் பட்டியலில் முன்னிலை வகித்து கடைசி 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்

  • மத்தியப் பிரதேச தொடக்க வீரர் அஜய் ரோஹெரா தனது முதல் அறிமுக ஆட்டத்தில் அவுட் ஆகாமல் 267* ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.
  • இதற்கு முன்னதாக முன்னாள் மும்பை வீரர் அமோல் மஜும்தார் 1994 ஆம் ஆண்டில் 260 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!