நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 30,31 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 30,31 2018

தேசிய செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகள்

நேதாஜி மூவர்ணக் கொடி ஏற்றிவைத்ததன் 75வது ஆண்டு நிறைவு விழா

  • போர்ட் பிளேய்ரில் டிசம்பர் 30, 1943 அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் மூவர்ணக் கொடி ஏற்றிவைத்ததன் 75வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள மூன்று தீவுகளின் பெயர்களை மாற்றி பிரதமர் நரேந்திர மோடி புதுப்பெயர் சூட்டினார்.
  • ராஸ் தீவு – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனப் பெயர் மாற்றப்பட்டது, 2) நீல் தீவு – ஷாஹீத் தீவு எனப் பெயர் மாற்றப்பட்டது மற்றும் 3) தி ஹேவ்லாக் தீவு – ஸ்வராஜ் தீவு எனப் பெயர் மாற்றப்பட்டது .

மத்திய பிரதேசம்

புதிய ஆன்மீகத் துறை

  • ஒரு புதிய ஆன்மீகத் துறையை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மத நம்பிக்கை, நிவாரணம் மற்றும் மகிழ்ச்சி துறை புதிய துறையுடன் இணைக்கப்படும்.

மேகாலயா

இந்திய கடற்படை மற்றும் என்.டி.ஆர்.எப் மீட்பு நடவடிக்கையை துவக்கியது

  • இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை ஆகியோரால் சிக்கிக்கொண்ட சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை மேகாலயாவில் தொடங்கியது.

புது தில்லி

தண்டி யாத்ரா

  • தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘தண்டி யாத்ரா’ கண்காட்சி புது தில்லியில் திறந்து வைக்கப்பட்டது. தேசிய நவீன கலை தொகுப்பு (NGMA) இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு

தூத்துக்குடி விமான நிலையம் 4 ஆண்டுகளில் 5வது சர்வதேச விமான நிலையமாக அமையும்

  • தூத்துக்குடி விமான நிலையம் தமிழ்நாட்டின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட உள்ளது. 

சர்வதேச செய்திகள்

உஸ்மான் புயல்

  • கடுமையான மழை மற்றும் கொடிய நிலச்சரிவுகளை தூண்டிய உஸ்மான் புயல் பிலிப்பைன்ஸ், மணிலாவின் பிகோல் பகுதியை தாக்கியது. 

வணிகம் & பொருளாதாரம்

நடுத்தர வருமானம் பெறும் குழுவிற்கான கடன் மானியம் மார்ச் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் [PMAY] கடன் மானியம் நடுத்தர வருமானம் பெறும் குழுமத்திற்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புறத்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

பார்வைக் குறைபாடுடையவர்கள் ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காண உதவ கைபேசி சார்ந்த தீர்வு

  • இந்திய ரிசர்வ் வங்கி, கைபேசி அடிப்படையிலான தீர்வை உபயோகித்து பார்வைக் குறைபாடுடையவர்கள் ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காண உதவுகிறது. தற்போது, இன்டேக்லியோ​​[intaglio] அச்சிடும் அடிப்படையிலான அடையாளங்கள் 100 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய் நோட்டுகளில் பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு உதவ காணப்படுகின்றன.

தரவரிசை & குறியீடு

ஐசிசி டெஸ்ட் வீரர்களின் தரவரிசை

  • பேட்ஸ்மேன் – 1) விராட் கோலி
  • பந்துவீச்சாளர் – 1) காகிசோ ரபாடா

மாநாடுகள்

இந்திய அறிவியல் காங்கிரஸ் -2019

  • பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 3ம் தேதி பஞ்சாப், ஜலந்தரில் இந்திய அறிவியல் காங்கிரஸ் 2019-ஐ துவக்கி வைப்பார்.
  • இந்த நிகழ்வின் 106 வது பதிப்பாக இது ஆகும். தீம் – ‘Future India: Science and Technology’.

திட்டங்கள்

கலா ​​உத்சவ்

  • பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மனித வளத்துறை அமைச்சகம், ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை, ஆண்டு தோறும் நடத்துகிறது.

ஒரே பாரதம்உன்னத பாரதம் [ஏக் பாரத் ஸ்ரேஸ்த்த பாரத்]

  • ஒரே பாரதம் – உன்னத பாரதம் [ஏக் பாரத் ஸ்ரேஸ்த்த பாரத்]திட்டத்தின் கீழ் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்காக மனித வளத்துறை அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விளையாட்டு அமைச்சகம் டாப்ஸ்[TOPS] திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்க 100 கோடி நிதி ஒதுக்கீடு

  • டோக்கியோவில் 2020ல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு , ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ், விளையாட்டு வீரர்கள் ரூ .100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை ஆணையத்தின் இயக்குனர் நீலம் கபூர் தெரிவித்தார்.

விளையாட்டு செய்திகள்

10வது ஆர் ஆர் லக்ஷியா கோப்பை

  • 10வது ஆர் ஆர் லக்ஷியா கோப்பை, சர்வதேச துப்பாக்கிச்சூடு போட்டி, கர்னாலாவில் நடைபெறும். 

பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 3 வது பதிப்பு

  • பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது பதிப்பு கர்நாடகாவின் விஜயநகராவில் தொடங்குகிறது. 

இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்

  • மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 

இலங்கை Vs நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்

  • கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 

2018ம் ஆண்டின் பெண்கள் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை ஐசிசி அறிவித்தது

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐசிசி, 2018ம் ஆண்டிற்கான பெண்கள் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.
  • நியூஸிலாந்தின் சுஜி பேட்ஸ் ஒரு நாள் அணியின் கேப்டனாகவும், இந்தியாவின் ஹர்மன் பிரீத் கவுர் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!