நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018

0

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018

தேசிய செய்திகள்

அசாம்

அசாம் NRC பட்டியலில் இருந்து வெளிநாட்டவர்களை நீக்குவது தொடங்குகிறது

  • அசாம் மாவட்ட அதிகாரிகள் குடிமக்கள் புதுப்பிக்கப்பட்ட தேசிய பதிவு (NRC) முழுமையான வரைவுகளில் சேர்க்கப்பட்ட ‘அறிவிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின்’ பெயர்களை நீக்குவதற்குத் தொடங்கியுள்ளனர்.

கோவா

கோவா அரசு சூதாட்டத்தில் விளையாடும் உள்ளூர் மக்களைத் தடை செய்யத்திட்டம்

  • கோவாவில் உள்ள மக்கள் சூதாட்டத்தில் விளையாடுவதை தடுத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு விளையாட்டு ஆணையர் நியமிக்கப்பட்டவுடன் 2019 ஆம் ஆண்டு முதல் தடை செய்யவுள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானா காவல்துறை நேரடி புகைப்பட தேடல் சாதகத்தை பெறுகிறது

  • TSCOP உடன் முக அங்கீகார அமைப்பு (FRS) ஒருங்கிணைந்ததால் குற்றத்தை தடுக்கவும் மற்றும் குறைந்த நேரத்தில் மாநிலம் முழுவதுமுள்ள குற்றவாளிகளை அடையாளம் காணவும் இது உதவும்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆப்டிகல் ஃபைபர் வலையமைப்பை அதிகரிக்க பாரதி திட்டம்

  • பாரதி ஏர்டெல் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் ஆப்டிகல் ஃபைபர் வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

பைலட் டிரோன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது

  • ஆளில்லாத வானூர்தி அமைப்புகள் (யுஏஎஸ்) அல்லது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகம் இணைந்தது. அரசு ஒரு பைலட் திட்டம் ஒன்றைத் தொடங்கியது, அதில் டிரான்ஸ் விவசாயம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் காவல் துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.

கர்நாடகா கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் யோகா வகுப்புகள் இனி கட்டாயம்

  • மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி கட்டாயமாக்க வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கும் இது பொருந்தும்.

சர்வதேச செய்திகள்

வெப்பமண்டல புயல் ஷாங்காயை தாக்கியது

  • ஜோங்டரி,கொரிய மொழியில் ஸ்கைலார்க் (வானம்பாடி) எனும் புயல் சீன நிதி மையத்தை தாக்கும் 12 வது சூறாவளி.

வணிகம் & பொருளாதாரம்

அதானி நகர்ப்புற எரிவாயு உரிமங்களின் மிகப்பெரிய வெற்றியாளராக விளங்குகிறார்

  • அதானி குழுமம் 6 நகரங்களில் தனியாக வாகனங்களுக்கு சி.என்.ஜி, வீடுகளுக்கு குழாய் சமையல் எரிவாயு விநியோகம் செய்யவும், அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் (IOC) ஒன்றிணைந்து மேலும் ஐந்து விநியோகம் செய்ய உரிமம் பெற்றுள்ளது.

மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் பியாஜியோ சவால்

  • இத்தாலியின் பியாஜியோ வாகனங்கள் பிரைவேட் லிமிடெட் (PVPL),இந்தியாவில் 5 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்வதற்கான இலக்கை அடைய சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் மின்சாரம் சார்ஜ் பேட்டரிகள் போன்ற மாற்று எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

மாநாடுகள்

தேர்தல் மேலாண்மைக்கான முதன்முதல் ஓரியண்டேஷன் ஒர்க்ஷாப்

  • இந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ.) 2016 பேட்ச் IAS அதிகாரிகளுக்கு ஒரு நாள் ஓரியண்டேஷன் ஒர்க்ஷாப்பை புதுடில்லியில் நடத்தியது.

‘பர்யதான் பர்வ்’

  • இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோருடன் சேர்ந்து இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை “பர்யதான் பர்வை” ஏற்பாடு செய்துள்ளது.

திட்டங்கள்

ஆரோக்கிய கர்நாடகம்

  • சுகாதாரத்துறை வருடாந்திர சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ரூ .1.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாநிலத்தின் அனைத்து சுகாதார திட்டத்தின் [ஆரோக்கிய கர்நாடகம்] கீழ் கொடுக்க திட்டமிட்டுள்ளது

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாட்டு தபால் அலுவலகங்கள் மூலம் இ-வணிகம் செய்ய அரசு அனுமதிக்கிறது

  • வெளிநாட்டு தபால் அலுவலகங்கள் மூலம் இ-வணிகம் செய்ய சுங்கத்துறை திட்டமிட்டுள்ளது.

தேசிய விளையாட்டு பல்கலைக்கழக மசோதாவை லோக் சபா நிறைவேற்றியது

  • மணிப்பூரில் ஒரு தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் ஒரு சட்டவரைவை மக்களவையில் நிறைவேற்றியது. இது நாட்டின் விளையாட்டு நிலையை உயர்த்துவதற்கான ஒரு நோக்கமாகும்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கருத்துத் திருட்டுக்கு எதிரான விதிகளை அங்கீகரிக்கிறது

  • பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தயாரித்த கருத்துத் திருட்டு பற்றிய புதிய ஒழுங்குமுறைகளை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது, மாணவர் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பதிவுகளை இழக்க நேரிடலாம் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்.

பாதுகாப்பு செய்திகள்

HAL ஐஐடி-கான்பூர் உடன் இணைந்து உருவாக்கிய ரோட்டரி ட்ரோனை சோதனை செய்தது 

  • இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் IIT- கான்பூர் இணைந்து உருவாக்கிய ஒரு 10 கிலோ ரோட்டரி ட்ரோன் சமீபத்தில் பெங்களூருவில் பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனத்தில் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

இ-பாசு ஹாட் போர்டல்

  • இனவிருத்தியாளர்கள் மற்றும் நாட்டுப்பசு வளர்ப்பாளர்களை இணைப்பதற்காக இ-பாசு ஹாட் போர்டலை (www.epashuhaat.gov.in) அரசு துவக்கியது.

விளையாட்டு செய்திகள்

பெண்கள் ஹாக்கி உலக கோப்பை

  • பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை இந்தியாவை 3-2 என்ற கணக்கில் அய்ராலாந்து வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆசிய நாடுகளின் சதுரங்கப் போட்டி கோப்பை

  • பாரம்பரிய ஆட்டத்தில் ஆண்கள் வெள்ளி பதக்கமும், பெண்கள் வெண்கலமும் வென்றனர். பிளிட்ஸ் ஆட்டத்தில் இந்திய பெண்கள் தங்கம் வென்றனர்.

PDF DOWNLOAD

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!