ஏப்ரல் 4 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

சென்னை அரசு பொது மருத்துவமனை சாதனை

  • உலகில் முதல்முறையாக முழங்கால் மூட்டு எலும்பை சேதப்படுத்தும் நோயினால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உட்பட 10 பேருக்கு அவர்களின் கால் எலும்பைக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 செ.மாதவன் காலமானார்

  • திமுக முன்னாள் அமைச்சர் செ.மாதவன்(84) உடல்நலக் குறைவால் காலமானார்.

பிரதமர், உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் புரோஹித் சந்திப்பு

  • தமிழகத்தில் காவிரி, ஸ்டெர்லைட் மற்றும் நியூட்ரினோ விவகாரங்கள் தொடர்பாக போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் சந்தித்து பேசினார்.

இந்தியா

ரயில்வே அறிவிப்பு

  • இனி ரயில்களில் ஏ/சி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மென்மையான, இதமான, சுத்தமான போர்வைகள் வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு

  • மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ஜகத் பிரகாஷ் நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 41 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக  பதவியேற்றனர்.

வேலைவாய்ப்பில் மேற்கு வங்கம் முதலிடம்

  • ஊரக வேலைவாய்ப்பில் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 சென்னை ஐஐடி தேர்வு

  • இந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் தேர்வாகியுள்ளது.

தனித்துவ அடையாள ஆணையம் தகவல்

  • ஆதார் தகவல் தொகுப்பில் தனி நபர்களைப் பற்றிய குறைவான தகவல்களே இடம்பெற்றுள்ளன என்றும் நிதி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறவில்லை என்றும் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

உலகம்

தீவிரவாத பட்டியலில் ஹபீஸ் கட்சி

  • சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீதுவின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
  • அமெரிக்காவின் அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

வணிகம்

நான்கு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்

  • நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 6, நோக்கியா 1, நோக்கியா சிரோக்கோ ஆகிய நான்கு புதிய மாடல் மொபைல் போன்களை நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

செர்பிய டிராக்டர் பிராண்டை வாங்கியது டாஃபே நிறுவனம்

  • சென்னையைச் சேர்ந்த டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (டாஃபே) நிறுவனம் செர்பியாவைச் சேர்ந்த ஐஎம்டி டிராக்டர் நிறுவன பிராண்டை வாங்கியுள்ளது.

விளையாட்டு

ஜூனியர் என்டிஆர் நியமனம்

  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு கோலாகல தொடக்கம்

  • ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகலமாக ஏப்ரல் 4 தொடங்குகிறது.
  • ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 6, 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!