ஏப்ரல் 3 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

தமிழக அரசு அரசாணை வெளியீடு

  • இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180 கோடி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வாகன சுற்றுப்பயணம்

  • காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன கருவிகள் அடங்கிய காச நோய் கண்டறியும் வாகன சுற்றுப் பயணம் தொடங்கிவைக்கப்பட்டது.
  • இந்த வாகனத்தில் உள்ள நவீன இயந்திரம் மூலம் பொதுமக்களிடையே காசநோய் பரிசோதனை மேற்கொண்டு 2 மணி நேரத்தில் முடிவைத் தெரிவித்து உரிய மருத்துவச் சிகிச்சைக்கு உதவ முடியும்.

புதுச்சேரியில் மின் கட்டணம் கடும் அதிகரிப்பு

  • புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது.
  • இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

சிபிஎஸ்இ அறிவிப்பு

  • 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடத்தப்படாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
  • மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ கூறியுள்ளது.

விஜயலட்சுமிக்கு பத்ம விருது

  • தமிழக நாட்டுப்புறப் பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்-க்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.

உலகம்

பொலிவியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

  • தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்

  • சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது.
  • இவ்விழா ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
  • இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

வணிகம்

நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ்

  • இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ் காம் தலைவராக தேப்ஜானி கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் பதவியை வகித்தவராவார்.

 ஊழியர்களை கோடீஸ்வரர் ஆக்கிய பந்தன் வங்கி

  • ரூ.4,473 கோடியை திரட்டுவதற்காக சமீபத்தில் பந்தன் வங்கி பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட்டது.
  • ஒரு பங்கின் விலை ரூ.499 அளவுக்கு உயர்ந்ததால் பந்தன் வங்கியின் தொடக்ககால ஊழியர்கள் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள்.

விளையாட்டு

ரபேல் நடால் மீண்டும் முதலிடம்

  • டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மும்பை புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்

  • ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கப்படவுள்ளன.
  • முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கின்றனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!