நடப்பு நிகழ்வுகள் – 8 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 8 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 8 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 8 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

2022 -ஆம் ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர்

  • 2022 -ம் ஆண்டுக்கான நாடாளு மன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 7 – டிசம்பர் 29 வரை நடைபெறவுள்ளது, இதில் முதல்முறையாக குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மாநிலங்களவை தலைவராக  பங்கேற்கவுள்ளார்.
  • மேலும் இக்குளிர்கால கூட்டத் தொடரில் 17 அமர்வுகளில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல மாநில கூட்டுறவு மசோதா திருத்தம் 2022

  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022ஐ மக்களவையில் 6 டிசம்பர் 2022 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது.
  • மேலும் இந்த புதிய திருத்த மசோதா பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002ஐ திருத்தும் வகையில் அமைந்துள்ளது.
  • பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002
    • கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்துவதற்கான ஒரு சட்டம், ஒரு மாநிலத்திற்கு மட்டுப்படுத்தப்படாத பொருள்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் உள்ள உறுப்பினர்களின் நலன்களுக்காக சேவை செய்கின்றது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஒய்.கே.அலாக் காலமானார்

  • பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகிந்தா் கே. அலாக் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் தில் 6/12/2022 அன்று காலமானார்.
  • 1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக ஒய்.கே.அலாக் பதவி வகித்தார், 1996 முதல் 2000 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார், திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில்சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0″  செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

  • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள் அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் அறிந்து கொள்ள “சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப்  0 என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இந்த செயலியில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் ஆப்பிள்/ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை இந்த செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம்.
    • சட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் தங்கள் வழக்குகளின் நிலை, உத்தரவு, தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை ஆகியவற்றை இந்த செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.”

வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி உற்பத்தியை பெருக்குதல்நிலக்கரி அமைச்சகம்

  • 12.2022 அன்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தெரிவித்தாவது:அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியா தனது நிலக்கரி உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொத்த நிலக்கரி பயன்பாடு இன்னும் உச்சத்தை எட்டவில்லை.
  • பொருளாதார ஆய்வு 2021-22,2030 ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி தேவை சுமார் 1000 மெட்ரிக் டன்களில் இருந்து3-1.5 பில்லியன் டன்களாக இருக்கும் என்று கணித்துள்ளது.நிலக்கரி தேவை தொடர்ந்து உயரும் என்றும், 2040 இல் உச்சத்தை அடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • எனவே, புதுப்பிக்கத்தக்கவையின் மீது உந்துதல் இருந்தாலும், இந்தியாவின் வளர்ந்து வரும் வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முதன்மையான எரிசக்தி ஆதாரமாக நிலக்கரி தொடரப் போகிறது என்று லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

2014 – 2022 க்கு இடையில் மூடப்பட்ட/ நிறுத்தப்பட்ட/ கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களின் எண்ணிக்கை மாநில வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது (தற்காலிகமானது):

S No. மாநிலம் நிலக்கரி சுரங்கங்களின் எண்ணிக்கை
1 அசாம் 3
2 சத்தீஸ்கர் 17
3 ஜார்கண்ட் 29
4 மத்திய பிரதேசம் 20
5 மகாராஷ்டிரா 13
6 ஒடிசா 5
7 தெலுங்கானா 12
8 மேற்கு வங்காளம் 26

 

 

சர்வதேச செய்திகள்

2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது 

  • 2022ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதலிடம் பெற்றுள்ள 10 வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1. வோர்டில் (Wordle) – ஆன்லைன் வார்த்தை விளையாட்டு 6. உலகக்கோப்பை (World Cup)
2. இந்தியா vs இங்கிலாந்து  (India vs England) 7. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies)
3. உக்ரைன் 8.ஐ-போன் 14 (iPhone 14)
4. ராணி எலிசபெத்(Queen Elizabeth) 9. ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer) -அமெரிக்க சீரியல் கில்லர்
5. இந்தியா – தென்னாப்பிரிக்கா (Ind vs SA) 10. இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League)

 

 

மாநில செய்திகள்

அட்மிரல் கோப்பை படகு போட்டி 2022

  • அட்மிரல் கோப்பை பாய்மரப் படகுப் போட்டியின் 11வது பதிப்பு கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் எழிம்லா அருகே உள்ள அழகிய எட்டிகுளம் விரிகுடாவில் தொடங்கியது. இந்திய கடற்படை அகாடமியின் கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் புனித் கே பஹ்ல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவிலிருந்து இரண்டு அணிகள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த படகோட்டம் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றன.
    • லேசர் ரேடியல் பாய்மரப் படகுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் பாய்மரப் படகுப் போட்டியானது நட்புறவான வெளிநாட்டுக் கடற்படைகளுடன் பாலங்களைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது.

தமிழகத்தில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

  • வேளாண் துறை சார்பில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாண்மை இடங்களை பிடித்துள்ளது 

  • தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4, 2022 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் பணியானது 42 மையங்களில் டிசம்பர் 7 -ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது.
  • எண்ணிக்கையில் கடைசி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்கு தேவையான 126 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

 

பொருளாதார செய்திகள்

2022 – 23 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தை 6.9% ஆக  உயர்த்தி உலக வங்கி அறிவித்துள்ளது

  • உலக வங்கியானது இந்தியப் பொருளாதாரத்திற்கான வளர்ச்சிக் கணிப்பை 2022-23 நிதியாண்டில் அதன் முந்தைய மதிப்பீட்டான5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • சவாலான சூழ்நிலைகளிலும் இந்தியாவின் பொருளாதார மீட்சியைப் உலக வங்கி வெகுவாக பாராட்டியுள்ளது, மற்ற வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய ஸ்பில்ஓவர்களிலிருந்து ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது.

ரிசர்வ் வங்கி  ரெப்போ வட்டி விகிதத்தை  உயர்த்தியுள்ளது

  • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம்90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கபட்டு உள்ளது ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி ரெப்போ வட்டி 0.35 சதவீதம் அதிகரிக்கபட்டு உள்ளது.
  • பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரே ஆண்டில் 5 வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
    • ரெப்போ வட்டி விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதம் ஆகும்.

 

நியமனங்கள்

ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி நியமனம்

  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அலி முகமது மாக்ரே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக, தாஷி ரப்ஸ்தான் – ஐ நியமித்து இந்திய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  • மேலும் அவர்12.2022 முதல் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என அறிவிக்கப்ட்டுள்ளது.
    • “இந்திய அரசியலமைப்பின் 223-வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி,ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார் என சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

NHPC குழுவில் முகமது அப்சல் அரசு நியமன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • NHPC இன் வாரியம் டிசம்பர் 6, 2022 முதல் முகமது அப்சலை அரசாங்க நியமன இயக்குநராக நியமித்துள்ளது.
  • அப்சல் தற்போது மின்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராக (DISTRIBUTION) பணியாற்றி வருகிறார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

300 ஆண்டுகள் பழைமையான நடுகல் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

  • மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் சாா்பில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதுரை வில்லாபுரம், சிந்தாமணி பகுதிகளில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன .
  • மதுரை தெற்கு வாசல்- வில்லாபுரம் பகுதியை இணைக்கும் பாலத்தின் இடது பக்கம் சாலை ஓரத்தில் மூன்றடி உயர முக்கோணப் பலகை கல்லில் ஆண், பெண் உருவங்கள் உள்ளன.
  • இதேபோல, மதுரை- சிந்தாமணி சாலையின் இடது பக்கச் சாலை ஓரத்தில் ஒரு நடுகல் சிற்பம் கண்டறியப்பட்ட நடுகல் 2 அடி உயரம், நீளம் கொண்ட சதுர வடிவப் பலகைக் கல்லில் பெண், ஆண் உருவங்கள் சுகாசனத்தில் அமர்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

இந்தியாவின் 77-ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர்

  • ஸ்பெயினில் தற்போது நடைபெற்று வரும் எலோபிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அவா், 6-ஆவது சுற்றில் ஸ்பெயினின் நம்பா் 1 போட்டியாளரான ஃபிரான்சிஸ்கோ வலேஜோ பொன்ஸுடன் டிரா செய்தபோது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.
  • இதனை தொடர்ந்து மும்பையைச் சோ்ந்த ஆதித்யா மிட்டல் (16) இந்தியாவின் 77-ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.
    • ஒரு செஸ் வீரா் கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெறுவதற்கு, முதலில் தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில் சாதகமான முடிவுகளைப் (நார்ம்) பெற்றிருக்க வேண்டும். அடுத்து, 2,500 ஈலோ புள்ளிகளை எட்ட வேண்டும்.

சிறந்த  பாரா பாட்மின்டன் போட்டியில் வீரர், வீராங்கனைகளுக்கான விருது

  • சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளார்,17 வயதான மனீஷா, நடப்பாண்டில் அனைத்து போட்டிகளிலுமாக 11 தங்கம், 5 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார்.
  • சிறந்த பாரா வீரா் பிரிவில் 2022 -ம் ஆண்டின் பாராலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் டாய்கி கஜிவாராவுக்கு கிடைத்தது.

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி

  • உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டிகள் கொலம்பியாவில் நடைபெற்றுவருகிறது.இதில் இந்தியாவின் மீராபாய் 200 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
  • இப்போட்டியில் சீன வீராங்கனை ஜியாங் 206 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்,டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவா 198 (89+109) கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார்.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!