நடப்பு நிகழ்வுகள் – 24 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 24 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 24 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 24 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

உள்நாட்டு விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் தரவரிசை பட்டியல் வெளியீடு

  • விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில்,ஏர் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • 2வது இடம் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா  மற்றும் இண்டிகோ  மூன்றாவது இடத்தில் உள்ளது, மேலும் கடைசி இடத்தில் GoFirst  நிறுவனம் பெற்றுள்ளது.

JNPA யின் தொடர்ச்சியான கடல் நீர் தர கண்காணிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது

  • ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA), ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறையுடன் இணைந்து, தொடர்ச்சியான கடல் நீர் தரக் கண்காணிப்பு நிலையத்தை (CMWQMS) உருவாக்கி, மின்சார சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனத்தை (EV) நவம்பர் மாதம் 21, 2022 அன்று அறிமுகப்படுத்தியது.
  • இதன் மூலம், JNPA வாகனங்களின் பசுமை இல்லா வாயு தடயத்தைக் குறைக்கும், மேலும் துறைமுக தோட்டத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தரத்துடன் இணங்குகிறதா என்பதை நீர் தர நிலையங்களின் தரவுகளான வெப்பநிலை, pH, கரைந்த ஆக்ஸிஜன், அம்மோனியா, கடத்துத்திறன், நைட்ரேட் போன்றவற்றை பரிசோதிக்க உதவியாக அமையும்.

கோவாவில் நடைபெறும் IFFI இல் குழந்தை உரிமைகள் பற்றிய திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன

  • UNICEF மற்றும் National Film Development Corporation (NFDC) ஆகியவை இணைந்து கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) குழந்தை உரிமைகள் என்ற கண்ணோட்டத்துடன் திரைப்படங்களை விளம்பரப்படுத்தவுள்ளன.
  • குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகளை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களுக்கான சிறப்புப் பிரிவுகள் முதல் முறையாக IFFI இல் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் IFFI இன் 9 நாள் கொண்டாட்டத்தின் போது NFDC மற்றும் UNICEF இணைந்து விவரிக்கும் ஆறு படங்கள் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளன.

அசாமின் புகழ்பெற்ற போர் வீரன் லச்சித் பர்புகான் பிறந்தநாள் விழா

  • அஹோம் கமாண்டர் லச்சித் பர்புகானின் 400வது பிறந்தநாளின் 3 நாள் விழா 23 நவம்பர் 2022 அன்று புது டெல்லியில் கொண்டாடப்படுகிறது.
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அஹோம் வம்சம் மற்றும் லச்சித் பர்புகான் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் கண்காட்சியை இந்த விழாவில் தொடங்கி வைத்தார்.

 

சர்வதேச செய்திகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

  • 22/11/2022 அன்று ஆஸ்திரேலிய பாராளுமன்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இடையில்  சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • மேலும் ஆஸ்திரேலியா-இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (ECTA) ஆஸ்திரேலிய வணிகங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கருட சக்தி கூட்டு இராணுவ பயிற்சி

  • தற்போது இந்தோனேசியாவின் கரவாங்கில் உள்ள சங்கா புவானா பயிற்சிப் பகுதியில் இந்தோனேசிய சிறப்புப் படைகளுடன் மற்றும் இந்திய சிறப்புப் படைத் துருப்புக்களின் ஒரு குழு இணைந்து கருட சக்தி என்ற இருதரப்பு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.மேலும் இந்த கூட்டு பயிற்சி  இருதரப்பு நாடுகளுக்கு இடையில் நாடாகும் எட்டாவது பதிப்பாகும்.
  • 21 நவம்பர் 2022 அன்று தொடங்கிய இந்தப் பயிற்சியானது இரு சிறப்புப் படைகளுக்கு இடையே கூட்டுப் பயிற்சியில் சிறப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான நோக்குநிலை, ஆயுதம், உபகரணங்கள், கண்டுபிடிப்புகள்  மற்றும் பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

நேபாள நாடாளுமன்ற தேர்தல்

  • நேபாளத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் வெளியிடப்பட்ட பிறகு இது இரண்டாவது பொதுத் தேர்தல்.
  • நேபாளத்தில், பிரதமர் ஷேர் பகதூர் டியூபா தனது சொந்த மாவட்டமான தன்குடாவில் இருந்து தொடர்ந்து 7வது முறையாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மூத்த நேபாளி காங்கிரஸ் தலைவர் திரு. டியூபா சுயேச்சை வேட்பாளர் சாகர் தாகலை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

 

மாநில செய்திகள்

உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக கோத்தகிரி லாங்வுட் சோலை அறிவிப்பு

  • இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக கோத்தகிரி லாங்வுட் சோலை -ஐ  அறிவித்துள்ளது மேலும் இவ்விருது வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் கோத்தகிரி லாங்வுட் சோலை புகழ்மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
  • ‘குயின் காமன்வெல்த் கனோபி’ என்ற பெயரில் ராயல் காமன்வெல்த் சொஸைட்டி என்ற அமைப்பின் மூலம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது,மேலும் இந்த காடுகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான பசுமை மாறாக்காடு ஆகும்.

‘விரு’ தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை வாட்ஸ் அப் எண் அறிமுகம்

  • இந்தியாவில் முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் விரு(VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான வாட்ஸ் அப் எண் 9488400438 எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் விரு(VIRU) தகவல் மற்றும் குறைதீர்ப்பு சேவை எண் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.(எ.கா ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரினை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய மற்றும் பல சேவைகள் இதனுள் அடங்கும்)

 

நியமனங்கள்

தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் நியமனம்

  • அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவராக அனில் சஹஸ்ரபுத்தே பதவி வகித்தார்,அவரது பதவி காலம் 2022 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் இடைக்கால தலைவராக உள்ள ஜெகதீஷ்குமார், ஏ.ஐ.சி.டி.இ.யில் பொறுப்பு வகித்தார்.
  • தற்போது கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் இயக்குனர் டி.ஜி.சீதாராமை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரையில் நீடிப்பார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டைரக்டர் ஜெனரல் நியமனம்

  • தாம்பரம் சானடோரித்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் புதிய டைரக்டர் ஜெனரலாக டாக்டர் மீனாகுமாரியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நியமனம் செய்துள்ளது.
  • மேலும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் மீனாகுமாரிக்கு, கூடுதல் பொறுப்பாக டைரக்டர் ஜெனரலாக பதிவேற்றுக் கொண்டார், இந்த, 2 நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரே தலைமையாக டாக்டர் மீனாகுமாரி பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் நியமனம்

  • பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநராக பினோத் குமாரை நியமித்து (ACC) அமைச்சரவையின் நியமனக் குழு 21 நவம்பர் 2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் அவர் மூன்று ஆண்டுகள் பணிபுரிகிறார்.
  • குமார் தனது வங்கிப் பயணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1994 ஆம் ஆண்டு மேலாண்மைப் பயிற்சியாளராகத் தொடங்கினார் மற்றும் கடந்த 28 ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றியுள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்தியாவில் 5 வகை பாக்டீரியாக்கள் தாக்குதல் 6.8 லட்சம் பேர் பலி ஆய்வறிக்கையில் தகவல்

  • அமெரிக்காவில் வெளியாகும், ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் உலகளவில் கடந்த 2019ம் ஆண்டில் 77 லட்சம் மக்கள் 33 வகையான பொதுவான பாக்டீரியா நோய்களுக்கு அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இ கோலி, எஸ் நிமோனியா, கே நிமோனியா, எஸ் ஆரியஸ் ஏ பாவ்மன்னி ஆகிய 5 வகை பாக்டீரியாக்களால்87 லட்சம் பேர் இறந்துள்ளனர் என மருத்துவ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விருதுகள்

2021 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள்

  • இந்த விருது நில சாகசம், நீர் சாகசம், விமான சாகசம் மற்றும் வாழ்நாள் சாதனை ஆகிய நான்கு பிரிவுகளில் வழங்கப்படும்.
  • விருது பெற்றவர்களுக்கு சிலைகள், சான்றிதழ்கள் மற்றும் விருதுத் தொகை ரூ. தலா 15 லட்சம் வழங்கப்படுகிறது.
வ.எண் பெயர் வகை
1

 

செல்வி நைனா தாகத் நில சாகசம்
2 ஸ்ரீ ஷுபம் தனஞ்சய் வன்மலி நீர் சாகசம்
3 குரூப் கேப்டன் குன்வர் பவானி

சிங் சாமியால்

வாழ்நாள் சாதனை

 

 

விளையாட்டு செய்திகள்

2024-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்  ஆட்ட முறையில்  மாற்றம்

  • 9-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா நாடுகள் இணைந்து 2024-ம் ஆண்டில் நடத்துகின்றன.
  • மேலும் 2024-ம் ஆண்டு உலக கோப்பை ஆட்ட முறையில் மாற்றம் செய்யப்பட்டு, உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவற்றை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் டாப்2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர்8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.பின்னர் இறுதி போட்டி நடைபெறும்.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தமுறை தரவரிசை பட்டியலில்   சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) முதல் இடத்தை பிடித்துள்ளார்.
  • பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினம்

நன்றி தெரிவித்தல் நாள்

  • நன்றி தெரிவித்தல் நாள் (U.S) 1941 ஆம் ஆண்டு முதல் நவம்பரில் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு நவம்பர் 24, 2022 கொண்டாடப்படுகிறது.
  • மீண்டும் ஒன்றிணைவதற்கும், உணவைப் பகிர்ந்து கொள்வதற்கும், நன்றி செலுத்துவதற்கும் மற்றும் அறுவடைத் திருவிழாவாகவும் பல நூற்றாண்டுகளாக பூர்வீக அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!