நடப்பு நிகழ்வுகள் – 22 & 23 ஜனவரி 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 22 ஜனவரி 2023
நடப்பு நிகழ்வுகள் – 22 ஜனவரி 2023

நடப்பு நிகழ்வுகள் – 22 & 23 ஜனவரி 2023

தேசிய செய்திகள்

G20-இன் கீழ் முதல் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு பெங்களூரில் நடைபெறவுள்ளது

 • 2023-ம் ஆண்டு,30 நவம்பர் வரை இந்தியா ஒரு வருடத்திற்கு G20-இன் தலைமைப் பதவியை வகிக்கும், G20 தலைமையின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை செயற்குழு (ECSWG) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம் நான்கு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. (MoEF&CC).
 • ECSWG குழு கூட்டத்தில் ‘கடலோர நிலைத்தன்மையுடன் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்’, ‘பாழடைந்த நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல்’,’பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல்’ மற்றும் ‘வட்டப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்’ ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.
  • மேலும் G20 இந்தியா பிரசிடென்சியின் கீழ் முதல் G20 சுற்றுச்சூழல் கூட்டம் பிப்ரவரி 09 முதல் 11 வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

ஜீவன் ஆசாத் என்னும் புதிய காப்பிட்டு திட்டம் அறிமுகம்

 • எல்.ஐ.சி., பல்வேறு காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ஜீவன் ஆசாத் என்ற புதிய திட்டத்தை ஜனவரி 20, 2023 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
 • ஜீவன் ஆசாத், தனி நபர் மற்றும் சேமிப்பு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இதன் வாயிலாக, பாலிசிதாரருக்கு சேமிப்பும், பாதுகாப்பும் கிடைக்கும்.
  • இத்திட்டத்திற்கு, குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாயாகவும், அதிகபட்ச உத்தரவாத தொகை 5 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில், மூன்று மாத குழந்தை முதல் 50 வயது பெரியவர் வரை சேர முடியும்.
  • இந்த பாலிசியை 15 முதல் 20 ஆண்டு காலத்துக்கு எடுக்க முடியும். காப்பீடு காலத்தில் இருந்து 8 ஆண்டுகள் கழித்தது போக, எஞ்சிய ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் கட்டணம் செலுத்தினால் போதும்.

 

சர்வதேச செய்திகள்

9வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

 • சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் உலகத் தமிழர் பொருளாதார உச்சிமாநாடு மார்ச் 18 முதல் 20, 2023 வரை துபாய், உலக வணிக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
 • மேலும் இந்த மாநாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்தும் வகையில் உயர்கல்வி, தொழில் முறைக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், என பல்வேறு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் உலக தமிழர் பொருளாதார மாநாடு இதுவரை 8 முறை பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. முதல் மாநாடு செனன்னையில் 2009 -ம் ஆண்டு நடைபெற்றது.

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம்‘Run for Life’ மாரத்தான் ஏற்பாடு செய்துள்ளது

 • காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் 21 ஜனவரி 2023 அன்று ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற கருப்பொருளுடன் 5 கிமீ மாரத்தான்‘Run for Life’ நடத்தப்பட்டது.
 • ‘Run for Life’ மாரத்தான் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான 75 ஆண்டுகால உறவுகளையும், இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளையும் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

 

மாநில செய்திகள்

ஜம்மு & காஷ்மீரில் SARAS Fair- 2023 நடைபெற உள்ளது

 • முதல் SARAS Fair- 2023 ஜம்மு & காஷ்மீரில் உள்ள பாக்-இ-பாஹுவில் பிப்ரவரி 4 முதல் 14,2023 வரை நடைபெறவுள்ளது .
 • அந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் தங்கள் கைவினைப்பொருட்கள், கைத்தறி, உணவுப்பொருட்கள் மற்றும் அவர்கள் சுயமாக தயாரித்த தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.

நாட்டிலேயே முதல் மாவட்டமாக  கேரளாவின் வயநாடு பகுதியில் பழங்குடியினருக்கும் அடிப்படை ஆவணங்கள் வழங்கபட்டுள்ளது

 • அனைத்து பழங்குடியின மக்களுக்கும் ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள், பிறப்பு/இறப்பு சான்றிதழ்கள், தேர்தல் அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் சுகாதார காப்பீடு போன்ற அடிப்படை ஆவணங்கள் மற்றும் வசதிகளை வழங்கும் நாட்டின் முதல் மாவட்டமாக வயநாடு திகழ்கிறது.
 • ஆவண டிஜிட்டல்மயமாக்கலுக்கான அக்ஷயா பிக் பிரச்சாரத்தின் (ABCD) ஒரு பகுதியாக வயநாடு மாவட்ட நிர்வாகம் 64,670 பழங்குடியின பயனாளிகளுக்கு 1, 42,563 சேவைகளை வழங்குவதன் மூலம் தகுதியான சாதனையை எட்டியுள்ளது.

தமிழ்நாடுஒடிசா விளையாட்டு துறைகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

 • தமிழ்நாடு, ஒடிசா மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு, உள்கட்டமைப்புகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
 • இது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கவும்,உலக தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமிகள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கையெழுத்தானது.

 

2022- ம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் விருது

 • ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா போலீஸ் ஸ்டேஷன் 2022ம் ஆண்டில், நாட்டிலேயே சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான விருதை வென்று, தரவரிசை பட்டியலில்  முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 • மேலும் காவல் நிலையத்தின் குற்ற விகிதம், விசாரணை, வழக்குகளின் தீர்வு, உள்கட்டமைப்பு, பொது சேவை உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • போலீஸ் ஸ்டேஷனின் தரத்தை உயர்த்தவும், மக்களிடையே நட்புறவுமிக்கதாக மாற்றவும், மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.

பிளாஸ்டிக்கை ஒழிக்க 100 நாட்கள் என்ற பிரசாரம் டெல்லியில் நடைபெற்றது

 • டெல்லியின் லெப்டினன்ட்-கவர்னர் வினை குமார் சக்சேனா 21 ஜனவரி 2023 அன்று ‘பிளாஸ்டிக்கை ஒழிக்க 100 நாட்கள்’ பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
 • இந்த பிரச்சாரம் டெல்லியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கான ஒரு சிறந்த முன்முயற்சியாகும் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யக்கூடியது மற்றும் பல்வேறு பொருட்கள் பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன என்று வி.கே.சக்சேனா கூறினார்.

மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் மாநிலம் உருவான தினம்

 • ஜனவரி 21, 2023 அன்று, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவை தங்கள் மாநில உருவான தினத்தை கொண்டாடுகின்றன. இந்திய அரசாங்கம் ஜனவரி 21, 1972 அன்று வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டம், 1971 இன் கீழ் அவர்களுக்கு மாநில அந்தஸ்தை வழங்கியுள்ளது.
 • இந்த ஆண்டு (2023) திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியவை தங்கள் 51வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது .
  • மணிப்பூரின் மகாராஜா போதாச்சந்திர சிங் 1947 இல் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • மேகாலயா காசி மலைகள், கரோ மலைகள் மற்றும் ஜெயின்டியா மலைகள் எனப்படும் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. காரோ மற்றும் காசியின் ஆட்சியாளர்கள் 1947 இல் இந்தியாவுடன் இணைந்தனர்
  • திரிபுரா 1949 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

 

நியமனங்கள்

சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் நியமனம்

 • சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 • தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டா் மஸ்தான் உயிரிழந்த காரணத்தால் இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார்

 • நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி, 2023-ம் ஆண்டில் நடைபெறும்  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிர்வாகியாக டெல்லி உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • அடுத்த ISSF துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை 2023க்கான நிதிப் பயன்பாட்டை நிர்வகிக்க அவர் நியமிக்கப்பட்டுள்ளார்; ISSF உலகக் கோப்பை (ரைபிள்/பிஸ்டல்) 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் போபாலில் நடைபெறவுள்ளது.

 

தொல்லியல் ஆய்வுகள்

மத்திய பிரதேசத்தில் 256 டைனோசர்களின் புதைபடிவ முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 • மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கில் உள்ள லாமேட்டா உருவாக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய டைனோசர்களுக்குச் சொந்தமான 256 புதைபடிவ முட்டைகளைக் கொண்ட 92 கூடு கட்டும் இடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 • இந்த புதைபடிவ முட்டைகளின் கண்டுபிடிப்பு இந்திய துணைக்கண்டத்தில் உள்ள டைட்டானோசர்களின் வாழ்க்கை விவரங்களை வெளிப்படுத்துகிறது.

 

புத்தக வெளியீடு

ஆர். கௌசிக், ஆர். ஸ்ரீதர் எழுதிய புத்தகம்COACHING BEYOND: My Days with the Indian Cricket Team’

 • ஆர். கௌஷிக் & ஆர். ஸ்ரீதர் ‘COACHING BEYOND: My Days with the Indian Cricket Team’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்.
 • இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர். ஸ்ரீதரின் ஏழாண்டு பயிற்சிக் காலத்தை இந்த புத்தகம் முதன்மையாக பிரதிபலிக்கிறது.
 • 1990 களின் பிற்பகுதியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆர். ஸ்ரீதர், சுறுசுறுப்பான வீரராக இருந்தபோது பயிற்சியின் மீதான தனது விருப்பத்தைக் கண்டறிந்தார்.
 • ஆர். கௌசிக் என்பவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கிரிக்கெட் எழுத்தாளர் உள்ளார். ஹைதராபாத்தில் நியூஸ் டைமில் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

டான் கிறிஸ்டியன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

 • ஆஸ்திரேலியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த டி20 கிரிக்கெட் வீரர் டான் கிறிஸ்டியன், தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
 • கிறிஸ்டியன் 18 வெவ்வேறு அணிகளுக்காக 405 டி20 போட்டிகளில் 5809 ரன்களை குவித்து 280 விக்கெட்டுகளை சர்வதேச மட்டத்திலும் ஏழு தனித்தனி போட்டிகளிலும் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக 23 டி20 மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

முக்கிய தினம்

பராக்கிரம் திவாஸ்

 • பராக்கிரம் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 அன்று கொண்டாடப்படுகிறது. இது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் (நேதாஜி என்று பிரபலமாக அழைக்கப்படும்) பிறந்த நாளைக் குறிக்கும் இந்திய தேசிய விடுமுறையாகும், இவர் ஒரு முக்கிய தேசியவாதி, அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.
 • இந்தியர்களை, குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக, அடக்குமுறையை எதிர்கொண்டாலும் அவரது தைரியம், பிடிவாதம், தன்னலமற்ற சேவை மற்றும் தேசபக்தி உணர்வு ஆகியவற்றைப் பின்பற்றுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!