நடப்பு நிகழ்வுகள் – 18 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 18 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 18 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 18 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

இந்தியா மெட் டெக் எக்ஸ்போ 2023

 • இந்தியா மெட்டெக் எக்ஸ்போ (IMTE), அரசாங்கத்தால் இந்திய மெட்டெக் தொழில்துறையின் முதல் மருத்துவ கண்காட்சி, 2023- ம் ஆண்டு ஜனவரி 17 முதல் 19 வரை புது டெல்லியில் உள்ள ஏரோசிட்டி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது,
 • கண்காட்சி “Future of Device, Diagnostics & Digital” என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளது.

நைட் ஃபிராங்க் தரவு மைய அறிக்கை

 • இந்தியாவில் தரவு மைய சேவை அதிக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிவுள்ளது மேலும் அரசாங்கக் கொள்கைகளால் சில  இயக்கப்படுகிறது, கடன் எளிதாக அணுகுதல் மற்றும் தரவு மைய  முதலீட்டை அதிகரிப்பதற்கான பிற சலுகைகள் போன்றவற்றில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது .
 • இதன் அடிப்படையில் நைட் ஃபிராங்கின் அறிக்கையின்படி, இந்திய நகரங்களான – ஹைதராபாத், சென்னை மற்றும் புது தில்லி, ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் மூன்று சிறந்த தரவு மைய சந்தைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

சர்வதேச செய்திகள்

G-20 தலைவர் பதவி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது

 • அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்த ஜி20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி தீவில் 14 நவம்பர் 2022 அன்று தொடங்கியது,
 • ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒரு உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். அதன்படி, அடுத்த தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கிறது,மேலும் 2023-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கும். இந்தியாவில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9-10ம் தேதிகளில் இதன் முதல் உச்சி மாநாடு நடக்கும் என ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

மாநில செய்திகள்

பசுமை கால மாற்ற எதிர்வுணர்வு திட்டம்

 • 2022- ம் ஆண்டு முதல் அரசு தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டத்தை 920 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவன உதவியுடன் செயல்படுத்தப்பட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 • மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயற்கை வள ஆதாரங்களை அதிகரித்தல், சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வனநிலம் மற்றும் வன உயிரின வாழ்விடங்களின் தரம் குன்றுதலை தடுத்தல், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் மருத்துவ சேவை

 • ஆளில்லா விமானம் மூலம் (ட்ரோன்) விலங்கு பராமரிப்புக்கான உலகின் முதல் தடுப்பூசி விநியோகம் அருணாச்சல பிரதேசத்தில் டெலிவரி ஸ்டார்ட்அப் நிறுவனமான TechEagle நிறுவனம் அறிமுக படுத்தியுள்ளது.
 • TechEagle இன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Hybrid Drone- Vertiplane X3, தரைவழி போக்குவரத்தை விட 12 மடங்கு வேகமாக மருந்துகளை வழங்குகிறது.

ஒட்டக பாதுகாப்பு திட்டம்

 • ஒட்டகங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒட்டகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு60 கோடி ரூபாய் ஒதுக்க ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பெண் ஒட்டகம் மற்றும் கன்றுக்குட்டியும் கால்நடை மருத்துவரால் குறியிடப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும். ஒட்டகம் வளர்ப்பவருக்கு 5,000 ரூபாயும், கால்நடை மருத்துவருக்கு ஒவ்வொரு அடையாள அட்டைக்கும் 50 ரூபாயும் வழங்கப்படும். ஒட்டகக் குட்டியின் ஓராண்டு நிறைவடைந்ததும், வளர்ப்பவருக்கு மற்றொரு தவணையாக ரூ.5,000 வழங்கப்படும்.
 • இரண்டு தவணைகளின் தொகையும் ஒட்டகம் வளர்ப்பவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

3 NH திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

 • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ரூ.1206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நவம்பர் 17,2022 அன்று சிலிகுரியில் அடிக்கல் நாட்டினார்.
 • இந்தத் திட்டங்களின் வளர்ச்சி மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள விவசாயத் துறைக்கான சாலைகளில் குறிப்பிடத்தக்க வகையில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தின்  இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

 • உத்தரகாண்ட் அரசு அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தை நைனிடாலில் இருந்து ஹல்த்வானிக்கு மாற்றம் செய்துள்ளது.
 • டெஹ்ராடூனில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நவம்பர் 16, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 

நியமனங்கள்

மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு  தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்

 • பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் முன்னோடி நிறுவனமான மெட்டா இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது.
 • மேலும் நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாயை பெருக்குவதற்கான பணிகளில் சந்தியா ஈடுபடுவார் என்றும், 2023ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று முதல் பதவி ஏற்பார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷரத் கமல் முதல் இந்திய வீரராக  சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 

 • சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில் (ITTF) தடகள ஆணையத்தில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அச்சந்தா ஷரத் கமல் பெற்றுள்ளார்.
 • ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளில் இருந்து நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் உட்பட எட்டு விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2022 முதல் 2026 வரை நான்கு ஆண்டுகள் தடகள ஆணையத்தில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நாசா விண்ணுக்கு செலுத்திய ஆர்டெமிஸ் -1 ராக்கெட்ன் புதிய புகைபடம்

 • மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல்.எஸ். ராக்கெட் விண்ணில் 16 நவம்பர், 2022 அன்று ஏவப்பட்டது.
 • தற்போது 9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.

 

விருதுகள்

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே கவுரவ மரியாதை பட்டம் பெற்றார்

 • இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை பிரான்ஸ் சென்றார் மேலும் இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு உதவியாக அமைந்தது.
 • இந்தப் பயணத்தில் பாரிஸில் உள்ள லெஸ் இன்வாலிட்ஸ் என்ற இடத்தில் அவருக்கு மரியாதைக் காவலர் பட்டம் வழங்கப்பட்டது.

சர்வதேச தரக் கட்டுப்பாட்டு மாநாடு 2022

 • 47வது சர்வதேச தரக் கட்டுப்பாட்டு மாநாடு (ICQCC-2022). நவம்பர் 15 முதல் 18 வரை ஜகார்த்தாவில் நடைபெறுகிறது. ICQCC-2022 இன் கருப்பொருள் “தரமான முயற்சிகள் மூலம் மீண்டும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டது”.
 • அந்த நிகழ்வில் NTPC QC குழு Frequent Choking of Collection Tanks of AHP-IV” என்ற தலைப்பில் வழங்கப்பட்டது. மேலும் உஞ்சஹர் அபியுதயாவைச் சேர்ந்த NTPCயின் QC குழு “தங்கம்” விருதை வென்றுள்ளது.
  • NTPC – National Thermal Power Corporation Limited

 

விளையாட்டு செய்திகள்

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்

 • ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில், தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் ஜூனியர் அணி போட்டியில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ஷிகா நர்வால் ஆகியோர் இந்தியாவுக்கு மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
 • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் ஜூனியர் டீம் போட்டியில் தென் கொரிய அணியான யாங் ஜியின், கிம் மின்சியோ மற்றும் கிம் ஜூஹீ ஆகியோரை வென்று தங்க பதக்கம் வென்றனர். தற்போது இந்தியா 22 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றது .

 

முக்கிய தினம்

69வது அகில இந்திய கூட்டுறவு வாரம்

 • இந்தியாவில் கூட்டுறவுத் துறைகளை கவுரவிக்கும் வகையில் தேசிய கூட்டுறவு வாரம் ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு முதல் தேசிய கூட்டுறவு வாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • அகில இந்திய கூட்டுறவு வார கொண்டாட்டத்தின் கருப்பொருளாக  “இந்தியா@75: கூட்டுறவு வளர்ச்சி மற்றும் எதிர்காலம்”.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!