நடப்பு நிகழ்வுகள் – 17 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 17 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 17 ஜூன் 2023

நடப்பு நிகழ்வுகள் – 17 ஜூன் 2023

தேசிய செய்திகள்

இந்திய கடற்படையானது இளைஞர்களுக்காக “ஜூல்லி லடாக்” என்ற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.
  • லடாக்கில் பொது சேவையைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களுடனான இணைப்பை மேம்படுத்தவும் இந்திய கடற்படையானது “ஜூல்லி லடாக்” என்ற முன்னெடுப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது லடாக்கில் வடக்கு பிராந்தியத்தில், மத்திய அரசின் திட்டங்களான ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் மற்றும் லடாக் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் “அக்னிபாத் திட்டம்” உட்பட இந்திய கடற்படையால் வழங்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

அமெரிக்காவிலிருந்து “30 MQ-9B பிரிடேட்டர் ட்ரோன்களை” வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில் 30 MQ-9B  ட்ரோன் கொள்முதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மற்றும் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த கொள்முதல் ஒப்பந்தம்  அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • கடல்சார் கண்காணிப்பு, வானத்திலிருந்து இலக்குகளை துல்லியமாக வீழ்த்துவது, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, வேட்டையாடும்-கொலையாளி என்று அழைக்கப்படும் இந்த 30 MQ-9B ட்ரோன்கள் வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NHAI – குறுகிய காலத்தில் விபத்து ஏற்பட்ட இடங்களை சரிசெய்வதற்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.
  • சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளாகும் இடங்களைச் சரிசெய்வதற்கான வழிகாட்டுதல்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கான ஒரு முன்னெடுப்பு முயற்சியை NHAI  எடுத்துள்ளது. 
  • இந்த முன்னெடுப்பு திட்டத்தின் கீழ், விபத்து ஏற்படக்கூடிய இடங்களைச் சரிசெய்வதற்காக ஒரு 1 லட்சத்திலிருந்து 25 லட்சம் வரை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இணையத்தில் பாதுகாப்பாக இருங்கள்’ என்ற முன்னெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டம்.
  • மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது(MeitY) ‘இணையதளத்த்தில் பாதுகாப்பாக இருங்கள்’ என்ற முன்னெடுப்பை Google உடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது.
  • பன்மொழி டிஜிட்டல் உள்ளடக்கம், இணையப் பாதுகாப்பு தொடர்பான கல்வி திட்டங்கள் மற்றும் இணையத்தில்  தகவல்களை எவ்வாறு வழிநடத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பு தொடங்க உள்ளது.

சர்வதேச செய்திகள்

ஜப்பானானது UNHCR உடன் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • வங்கதேசத்தில் வாழும் ரோஹிங்கியா அகதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் பொது வாழ்வு தேவைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையருக்கு (UNHCR) ஜப்பான் சுமார் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • UNHCR தலைமையில் வங்கதேச பிரதிநிதி ஜோஹன்னஸ் வான் மற்றும் வங்கதேசத்திற்கான ஜப்பான் தூதர் இவாமா கிமினோரி ஆகியோர் வங்கதேச தலைநகரமான டாக்காவில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைகளை “சீர்திருத்த இல்லங்களாக” மாற்ற திட்டம்.
  • உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 15 அன்று சிறை தொடர்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாநிலத்தில் உள்ள சிறைகளை சீர்திருத்த இல்லங்களாக மாற்றுவதற்கான உத்தரவை வெளியிட்டார். 
  • 2023 நவீன சிறைச்சாலைச் சட்டமானது சமீபத்தில் இந்திய அரசால் தயாரிக்கப்படுவதாகவும் மேலும் அது கைதிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை பின்பற்றி தெளிவாக உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காற்றாலை மின்சாரத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

  • இந்திய அரசாங்கத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், ஜூன் 15 அன்று புதுதில்லியில் உலகளாவிய காற்று தினத்திற்கான மாநாட்டை நடத்தியது. 
  • இந்தியாவில் காற்றாலை ஆற்றலை மேம்படுத்தல் மற்றும் விரைவுபடுத்துவதற்கான சாத்தியமான வழிகளைப் பற்றி விவாதிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “பவன் – உர்ஜா: இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துதல்” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.
  • மேலும் இந்த மாநாட்டில், 2022-23 நிதியாண்டில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக காற்றாலை திறனை அடைந்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது என மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் பழமை வாய்ந்த “விஹு குஹ்” திருவிழாவானது தொடங்கியது.
  • அருணாச்சல பிரசேத்தின் மிகவும் பழமை வாய்ந்த தங்சா பழங்குடியினரினால் மிகவும் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படும்  விஹு குஹ் திருவிழாவானது ஜூன் 15 அன்று தொடங்கியுள்ளது.
  • மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள நல்லிணக்கத்தை போற்றும் வகையில், இந்த விழாவானது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

2 நாள் “அறிவியல்-20” மாநாடானது போபாலில் நடத்த திட்டம்.
  • இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் இரண்டு நாட்களுக்கான “அறிவியல்-20” மாநாடானது போபாலில் ஜூன் 16 அன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்திய தேசிய அறிவியல் அமைப்பின் தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் அறிவியலை இணைத்தல்” என்பது இந்த மாநாட்டிற்கான கருப்பொருளாகும்.

நியமனங்கள்

சஞ்சய் குமார் – கெயில் நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்பு.
  • இந்திய பொது நிறுவனமான கெயில்(GAIL) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக (சந்தைப்படுத்துதல்) “ஸ்ரீ சஞ்சய் குமார்” ஜூன் 15 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
  • இந்த நியமனத்திற்கு முன், ஏப்ரல் 2022 முதல் இந்தியாவின் மிகப்பெரிய CNG விநியோக நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாகிஸ்தானுக்கான முதல் பெண் பிரிட்டிஷ் பெண் தூதராக “ஜேன் மேரியட்” நியமனம்.
  • பாகிஸ்தானுக்கான அடுத்த பிரிட்டிஷ் உயர் ஆணையராக மூத்த அதிகாரி ஜேன் மேரியட்டை இங்கிலாந்து நாடானது ஜூன் 15 அன்று நியமித்துள்ளது. இந்த நியமனத்தில் மூலம் இவர் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கான “முதல் பெண் பிரிட்டிஷ் பெண் தூதர்” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
  • இவர் முந்தய காலங்களில் ஈராக்கிற்கு மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனின் சர்வதேச  விவகாரங்களை சிறப்பாக கையாண்டதால் இந்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று என்று உயர் ஆணையாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேவிஸ் கோப்பை போட்டி இயக்குநராக “பெலிசியானோ லோபஸ்” நியமனம்.
  • டேவிஸ் கோப்பையின் இறுதிப் போட்டிக்கான இயக்குநராக பெலிசியானோ லோபஸ் தலைமையேற்று நடத்துவதற்காக, நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ஜூன் 15 அன்று அறிவித்துள்ளது.
  • இவர் இந்த நியமனத்தின் மூலம் தனது சிறப்பான செயல்முறையின் மூலம் போட்டியை மேம்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Feliciano Lopez, new director of the Davis Cup Finals, publishes the first words - UK Sports News

விளையாட்டு செய்திகள்

கேஎஸ்எஸ்எம் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  வருண் தோமர் காற்றழுத்த துப்பாக்கி பிரிவில் தங்கம் வென்றார்.
  • சமீபத்தில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வருண் தோமர், ஜூன் 15 அன்று நடைபெற்ற குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
  • மேலும் இந்த இறுதிப் போட்டியில் ஆறு துப்பாக்கிச் சுடும் வீரர்களைக் கொண்ட இராணுவ துப்பாக்கிச் சுடுதல் பிரிவிலிருந்து சாகர் டாங்கி 219.4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இரங்கல் செய்திகள்

இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற நடிகை க்ளெண்டா ஜாக்சன் மறைவு.
  • இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற நடிகையான க்ளெண்டா ஜாக்சன், தனது 87வது வயதில் நீண்ட நாள் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். 
  • இவர் இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மற்றும் இவர் BAFTA மற்றும் இரண்டு முறை ஆஸ்கார் பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

முக்கிய தினம்

பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினம் 2023
  • பல்வேறு இடங்களானது பாலைவனமாக்குதலை தடுப்பதற்கான  சர்வதேச முயற்சிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • “அவளுடைய நிலம். அவளுடைய உரிமைகள்” (Her Land. Her Rights) என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

 

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!