நடப்பு நிகழ்வுகள் – 14 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 14 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 14 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 14 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

குறை தீர்க்கும் குறியீட்டு பட்டியல்

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நவம்பர் மாதத்தில் குறைதீர்ப்புக் குறியீட்டில் நான்காவது மாதமாக முதலிடத்தைப் பிடித்தது.
  • பொதுக் குறைகளைத் தீர்ப்பதற்காக அனைத்துக் குழு A அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறை (DARPG) மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது.
    • வாடிக்கையாளர்களிடம் சிறந்த உறவு மேலாண்மை அமைத்ததன்  மூலம் UIDAI மையப்படுத்தப்பட்ட குறைகளைக் கையாளும் யுத்தியை  நோக்கி நகர்ந்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தை நடத்தும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது

  • செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கான ஸ்பெக்ட்ரத்தை ஏலம் எடுக்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும், மேலும் இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட வேண்டும் என்று TRAI தலைவர் தெரிவித்தார்.
  • TRAI தலைவர் கூறுகையில், நாங்கள் கொண்டு வரும் எந்தவொரு அமைப்பும் உண்மையில் இந்தத் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக மட்டுமே தவிர எந்தச் சுமையையும் அதிகரிக்காது.

 

சர்வதேச செய்திகள்

நியூசிலாந்தில் புகைப்பிடிக்க புதிய சட்டம் விதிக்கப்பட்டுள்ளது

  • நியூசிலாந்தில் இளைஞர்கள் புகைப்பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிகரெட் வாங்குவதற்கு வயது வரம்பையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டு மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதைக் குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்யப்பட்டு  புதிய மசோதாவின்படி இளைஞர்கள் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இப்புதிய சட்டத்தின் படி 2009 – ம் ஆண்டு  ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

மாநில செய்திகள்

தனி நபர் வருமானம் பட்டியல் “இந்தியா இன் பிக்சல்ஸ்” அமைப்பு வெளியீட்டுள்ளது 

  • 2019 – 2020ம் ஆண்டுக்கான தனிநபர் வருமானம் பற்றிய ஆய்வறிக்கையை, ‘இந்தியா இன் பிக்சல்ஸ்’ அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக இந்த தனிநபர் வருமான புள்ளி விவரம் தர வரிசை படுத்தபட்டுள்ளது.
  • அப்பட்டியலில் தமிழகத்திலேயே அதிகமாக சம்பாதிப்பவர்கள் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது, இவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் ரூ.3.84 லட்சம் சம்பாதிக்கிறார்கள். 2வது இடத்தில் கோவை மாவட்டமும், 3வது இடத்தில் ஈரோடு மாவட்டம் இடம் பெற்றுள்ளது.

கர்நாடகாவில் “நமது கிளினிக்” -கள் திறக்கப்படவுள்ளன

  • கர்நாடகாவில் நகர்ப்பகுதி ஏழை மக்களுக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ‘நமது கிளினிக்குகள்’ என்னும் மருந்தகத்தை டிசம்பர் 14ல், அம் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைக்கிறார்.
  • மேலும் மாநிலம் முழுதும், 438 நமது கிளினிக்குகள் திறக்க, அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக 114 கிளினிக்குகள் திறக்கப்படும் என்றும் மற்றவை ஜனவரி மாத இறுதியில்  திறக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஜிகா வைரஸ் தொற்று

  • கர்நாடக மாநிலத்தில் முதல்முறையாக ஜிகா வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
  • ஜிகா வைரஸ் கடந்த 1947ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜிகா வைரஸ் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம்மனிதர்களுக்கு பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக வழங்க அறிவிப்பு

  • டெல்லியில் ஜனவரி 1ஆம் தேதி முதல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில், 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
  • தற்போது, தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 212 ஆக உள்ளது,இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் சுகாதாரத் துறை சார்பாக மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார ஆரம்ப மையங்களில் மேலும் 238 மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ்(IIT- Madras) “அளவு நிதியில் என்னும்  ஐடிடிடி(IDDD) திட்டத்தை” அறிமுகப்படுத்துகிறது

  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) அளவு நிதியியல் என்னும் (Quantitative Finance) ஒரு புதிய இடைநிலை இரட்டை பட்டம் (ஐடிடிடி) திட்டம்  குறித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
  • BTech இரட்டைப் பட்டப்படிப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலாண்மை படிப்புகள், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகள் இணைந்து புதிய திட்டத்தை வழங்குகின்றன.
  • IDDD-Interdisciplinary Dual Degree

சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷனின் தலைவர் காலமானார்

  • மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்மீக அமைப்பு சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன் -ல் 2009-ம் ஆண்டு முதல் சாரதா மடத்தின் தலைவராக இருந்து வந்தவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா.
  • 102 வயதான பிரவ்ராஜிகாவுக்கு சென்ற வாரம் காய்ச்சலால் உடநலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11/12/222 நண்பகலில் சிகிச்சை பலனின்றி பிரவ்ராஜிகா காலமானார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

சிவகங்கை அருகே 3500 ஆண்டுகளுக்கு பழமையான கல்வட்டுகள் கண்டுபிடிப்பு

  • சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பகுதியில் தொல்நடை குழு மேற் கொண்ட ஆய்வில் கல்வட்டங்கள், முதுமக்கள்தாழிகள், இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை, எச்சங்களை பாதுகாக்க நம் முன்னோர் பெரு முயற்சி எடுத்து கல்வட்டங்களை அடுக்கியுள்ளனர். அங்கு கிடைக்கக்கூடிய கல் வகைகளைக் கொண்டு அக்கல்வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

திருவாடானை அருகில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

  • திருவாடானை அருகே ஓரியூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு மாவட்டத்தில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நிலவிலிருந்து பூமிக்குத் திரும்பியது நாசாவின் விண்கலம்

  • அப்பல்லோ விண்கலத் திட்டங்களுக்கு அடுத்து முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்காக ‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.
  • இத்திட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ளது,மேலும் ஒலியின் வேகத்தைப் போல் 32 மடங்கு வேகத்தில் வளிமண்டலுக்குள் நுழைந்து, 5,000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

விளையாட்டு செய்திகள்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2022

  • போபாலில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் பெண்கள் போட்டியில் மனு பாக்கர் தங்கப் பதக்கம் வென்றார்.
  • தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பின் 65வது பதிப்பில், ஹரியானாவின் மனு பாக்கர், தெலுங்கானாவின் இஷா சிங்கை இறுதிப் போட்டியில் தோற்கடித்து முதலிடம் பிடித்து 583 புள்ளிகளுடன் தகுதி பெற்றார்.

உலக  ஜூனியர் விஷு சாம்பியன்ஷிப் தொடர் 2022

  • உலக ஜூனியர் விஷு சாம்பியன்ஷிப் தொடர் இந்தோனேசியாவில் நடைபெற்றது.
  • இத்தொடரில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆயிரா சிஸ்டி வெண்கலப் பதக்கம் வென்றார். உலக ஜூனியர் விஷு வென்ற முதல் சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற முதல் காஷ்மீர் மாநில வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்

 

முக்கிய தினம்

2022-தேசிய மின் அமைச்சகம் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை கொண்டாடுகிறது 

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ஆம் தேதி தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது,எரிசக்தி செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் நாட்டின் சாதனைகளை எடுத்துரைப்பது இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.மேலும் “V.YATRA” என்னும் செயலி மற்றும் இணைய தளம் வெளியீடப்பட்டுள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!