ஆகஸ்ட் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு:
கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் தற்போது டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்து 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் தற்போது 4ம் அலை தீவிரம் எடுத்துள்ளது. இதனால் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆகஸ்ட் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன்கிழமை பதிவான தரவுகளின்படி 3,793 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 187 பேர் நோய் தொற்றால் இறந்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. மருத்துவ வல்லுநர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் மூலம் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மருத்துவர்கள் சங்க பேரவை வலியுறுத்தியது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் கூடுவது தடுக்கப்படுவதால் நோய் தொற்று பரவும் விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் வழக்கம் போல் இயங்கும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.