2028 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் கிரிக்கெட்? ICC விளக்கம்!

0
2028 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் கிரிக்கெட்? ICC விளக்கம்!
2028 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் கிரிக்கெட்? ICC விளக்கம்!
2028 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் கிரிக்கெட்? ICC விளக்கம்!

தடகளம், மல்யுத்தம், ஹாக்கி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை உள்ளடக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டையும் சேர்ப்பதற்கான தனது நோக்கத்தை ICC தற்போது உறுதி செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டி

ICC சார்பில், 2028 ஆம் ஆண்டுக்கான பயணத் திட்டத்தில் விளையாட்டு சார்பான ஏலத்திற்கான முன்னெடுப்புகள் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கியுள்ளது. இந்த ஏலத்தின் போது ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான தனது நோக்கத்தை ICC உறுதி செய்துள்ளது. அதாவது முப்பது மில்லியன் கிரிக்கெட் ரசிகர்களை கொண்டுள்ள அமெரிக்காவில், 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் இணைப்பதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை பொருத்தளவு இதுவரை ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

அந்த வகையில் கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட இரண்டு கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்றன. இந்நிலையில் தான் ICC யின் திட்டமிடுதலில் கீழ், கிரிக்கெட் விளையாட்டு அடுத்த ஆண்டு பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுகளில் இடம்பெற உள்ளது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளுக்குள் கிரிக்கெட் விளையாட்டை கொண்டு வர முயற்சி எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ICC தலைவர் கிரெக் பார்க்லே, ‘ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது விளையாட்டுக்கு நன்மை பயக்கும்.

முன்னதாக கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது கற்பனைக்கு எட்டாதது. எனினும் எதிர்கால விளையாட்டுகளின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இந்த முயற்சியின் பின்னால் எங்கள் விளையாட்டு ஒன்றுபட்டுள்ளது. மேலும் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கின் எதிர்காலமாக நாங்கள் பார்க்கிறோம். உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை பார்க்க விரும்புகிறார்கள்’ என கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என்று பணிக்குழு தெரிவித்துள்ளது. பல ஆர்வமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அமெரிக்காவில் உள்ளனர். மேலும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டைப் பின்தொடர்வதால், லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது பெரும் மதிப்பை அளிக்கும் என்றும் அமெரிக்காவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான திட்டங்கள் நிறைவேறுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!