திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம் – நீதிமன்றம் அதிரடி!

0
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம் - நீதிமன்றம் அதிரடி!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம் - நீதிமன்றம் அதிரடி!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம் – நீதிமன்றம் அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17 வருடம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாததால் சேலத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் வழக்கில் முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம்:

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக கோவில் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள், சாமி ஊர்வலம் போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. மேலும் கோவில் நடை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் திறக்கப்பட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சேலம் அழகாபுரத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ. 12,250 கட்டி முன்பதிவு செய்திருந்தார். இதை அடுத்து அவர்களுக்கு எஸ்.எஸ். நம்பர் ஒதுக்கப்பட்டு 2020ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்டு ரசீதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இவர்களுக்கு பிரேக் தரிசனம் செய்ய தேதி தரப்படும் என தேவஸ்தானம் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

கலைகட்டும் ராதிகா & கோபி திருமண ஏற்பாடுகள், அதிர்ச்சி நிறைந்த ப்ரோமோ – பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!

இந்த நிலையில் ஹரிபாஸ்கர் 17 வருடம் காத்திருந்தும் அவர் முன்பதிவு செய்திருந்த மேல் சாத்து வாஸ்திர சேவைக்கு அனுமதிக்கப்படாததால் தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர்மானத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்திற்குள் மனுதாரருக்கு மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் அல்லது சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தரிசனத்திற்காக கட்டிய ரூ.12,250 தொகையை உத்தரவு பிறப்பித்த இரண்டு மாத காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இல்லையெனில் 6 சதவீதம் வட்டியுடன் திரும்ப தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!