சொகுசு கார் வரிவிலக்கு வழக்கு – நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் கண்டனம்!

0
சொகுசு கார் வரிவிலக்கு வழக்கு - நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் கண்டனம்!
சொகுசு கார் வரிவிலக்கு வழக்கு - நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் கண்டனம்!
சொகுசு கார் வரிவிலக்கு வழக்கு – நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் கண்டனம்!

தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் தனுஷிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கு இன்று மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்:

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷ் தனது பெயரில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றினை வாங்கியுள்ளார். பொதுவாக, இந்தியாவில் வெளிநாட்டு கார்களை வாங்கும் போது அரசிற்கு தகுந்த நுழைவு வரியினை செலுத்துவது அவசியம். நடிகர் தனுஷ் வாங்கியிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு 60.66 லட்சம் ரூபாய் நுழைவு வாரியாக வணிகவரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 7 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் – பள்ளிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறப்பு!

இதனை விசாரித்த நீதிபதிகள் 50 சதவீத வரியினை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். சொகுசு காருக்கு வரியாக 30.33 லட்ச ரூபாயினை வணிகவரித் துறைக்கு செலுத்தி விட்டால் காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், நுழைவு வரியினை தனுஷ் தரப்பில் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தனுஷ் தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், தனுஷ் தரப்பில் இருந்து வழக்கினை வாபஸ் பெற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டதற்கு பின்பாக, எதற்கு தற்போது வழக்கினை வாபஸ் பெற கூற வேண்டும். அதனை எவ்வாறு அனுமதிக்க முடியும்? நமது நாட்டில் அனைவரும் முறையாக வரியை செலுத்தி வருகின்றனர். பால்காரர் உள்ளிட்ட ஏழைகள் கூட அரசு விதித்துள்ள பெட்ரோல் வரியினை முறையாக செலுத்தி வருகின்றனர், தங்களால் செலுத்த முடியவில்லை என்று நீதிமன்றத்தினை நாடுகிறார்களா?” என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!