கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை – நீதிமன்றம் அதிரடி!

0
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை - நீதிமன்றம் அதிரடி!
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை - நீதிமன்றம் அதிரடி!
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை – நீதிமன்றம் அதிரடி!

பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளனர்.

கழிவுகள் அகற்றம்:

வெளிநாடுகளில் மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக மனிதர்கள் இறங்கி மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்து வருகின்ற அவல நிலை நிலவி வருகிறது. இது குறித்து பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இதில் பலர் உயிரிழந்த சம்பவம் ஆங்காங்கே பதிவாகியது.

Surf Excel, Rin, Lifebuoy விலை திடீரென அதிகரிப்பு – புதிய பட்டியல் இதோ!

இதனை தொடர்ந்து பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை மனிதர்கள் சுத்தம் செய்வது மனித தன்மையற்ற செயல் என கூறியுள்ளார்.

Reliance Jio Fiber புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் – பயனர்கள் வரவேற்பு!

இது குறித்து அரசு தரப்பு வக்கீல் தற்போது பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக பதில் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த முடிவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!