தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி – இன்று முதல் அமல்!
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இனி நாள் முழுவதும் தடுப்பூசி போடப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த நிலையில் அவர்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனை அடுத்து தொற்று பரவலின் நிலையை பொறுத்து தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அளிக்கப்பட்டன. இந்த நிலையை மாற்றவும், தொற்றிலிருந்து மக்களை தற்பாதுகாப்பு செய்யவும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன.
தமிழகத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இரண்டு தவணையாக மக்களுக்கு போடப்பட்டு வந்தன. இது தொற்று பரவலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மேலும் மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்தது. தமிழக அரசு, தங்கள் மாநிலத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தது.
TN Job “FB
Group” Join Now
இதனை அடுத்து மாநிலங்களின் தடுப்பூசி தேவையை பொறுத்து மத்திய அரசு தடுப்பூசி வழங்குதலை அதிகப்படுத்தியது. இதனை அடுத்து போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசிடம் கையிருப்பதால் இனி நாள் முழுவதும் தடுப்பூசி வழங்கப்படும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இந்த திட்டத்தை தொடக்கி வைத்த தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் இனி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள் முழுவதும் (24 மணிநேரமும்) தடையின்றி தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று உறுதி அளித்துள்ளார்.