தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – முதல்வரிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி பின்னர் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நேரத்தில் பல தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 14 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜூன் 14 முதல் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘இனி டிரைவிங் ஸ்கூலில் பயிற்சியை முடித்தாலே லைசென்ஸ்’ – மத்திய அரசு அறிவிப்பு!
இது குறித்து கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மாணவர் சேர்க்கை பணிகளுக்காக ஜூன் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கிராமங்களில் கூட கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே வட்டாரங்கள் அளவில் முகாம் அமைத்து ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
மேலும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர விலக்கு அளிக்க வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் கிராமப்புற துப்புரவு பணியாளர்களை கொண்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பின்னர் வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டு கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுருந்தார்.