நாடு முழுவதும் 8 மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் – கொரோனா தடுப்பு!
கொரோனா தொற்று பரவல் பல மாநிலங்களில் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து 8 மாநிலங்கள் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு கடிதம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வந்த நிலையில், ஏப்ரல் மாத இறுதிக்குள் தொற்று பரவல் உச்சத்தை அடைந்தது. இதனால் பல மாநிலங்களும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க தொடங்கியது. தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு மக்களும் அறிவுறுத்தப்பட்டனர். தீவிர கட்டுப்பாடுகளின் காரணமாக ஜூன் மாத இறுதி முதல் தொற்று பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருகிறது.
தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை நிதி விடுவிப்பு – மத்திய அரசு அறிக்கை!
பல மாநிலங்களிலும் தொற்று குறைந்து இயல்பு நிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த எட்டு மாநிலங்களுக்கும், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தினசரி பாதிப்புகள் குறைந்து வரும் போதிலும், வார பாதிப்பு நிலவரம் குறித்து கண்காணிக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
மேலும், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டறிந்து தனிமை படுத்த வேண்டும். தொற்றை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.