முழு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, தொடக்க பள்ளிகள் திறப்பு – மாநில அரசின் புதிய தளர்வுகள்!

0
முழு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, தொடக்க பள்ளிகள் திறப்பு - மாநில அரசின் புதிய தளர்வுகள்!
முழு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, தொடக்க பள்ளிகள் திறப்பு - மாநில அரசின் புதிய தளர்வுகள்!
முழு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, தொடக்க பள்ளிகள் திறப்பு – மாநில அரசின் புதிய தளர்வுகள்!

நாகாலாந்து அரசு 4ம் வகுப்பு வரையிலான ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது மற்றும் முழுமையாக இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் போன்ற அடுத்தகட்ட தளர்வுகளை நேற்று அறிவித்துள்ளது.

புதிய தளர்வுகள்:

கொரோனா தொற்று பரவல் காரணமாக அமலில் இருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளில், தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதால் கடந்த ஜூலை 1 முதல் படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. இறுதியாக 7வது கட்டமாக அக்டோபர் 31ம் தேதி வரை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான கோவிட்-19 தொடர்பான உயர் அதிகாரக் குழுவின் மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி பொது நகைக்கடன் தள்ளுபடி – அதிர வைக்கும் முறைகேடுகள்! தீவிர நடவடிக்கை!

இக்கூட்டத்தின் முடிவில், நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை அடுத்தகட்ட தளர்வுகள் அளிக்கப்படும் என்று அரசு செய்தித் தொடர்பாளரும் மூத்த அமைச்சருமான நெய்பா க்ரோனு நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் கோவிட் -19 பொருத்தமான பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 1 முதல் 4ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது.

கல்லூரி, பல்கலைகளில் 21 நாட்கள் தீபாவளி விடுமுறை – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!

மேலும் உள்ளூர் சூழ்நிலையைப் பொறுத்து அந்தந்த மாவட்ட பணிக்குழு பள்ளிகள் திறப்பதற்கான அனுமதியை வழங்க இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பயணிகள் வாகனங்கள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் வழக்கம் போல் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பணிக்குழுவினர், அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தடுப்பூசி இயக்கத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!