அக்.25 வரை இரவு ஊரடங்கு அமல், அக்.21 முதல் தொடக்க பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு வெளியீடு!

0
அக்.25 வரை இரவு ஊரடங்கு அமல், அக்.21 முதல் தொடக்க பள்ளிகள் திறப்பு - அறிவிப்பு வெளியீடு!
அக்.25 வரை இரவு ஊரடங்கு அமல், அக்.21 முதல் தொடக்க பள்ளிகள் திறப்பு - அறிவிப்பு வெளியீடு!
அக்.25 வரை இரவு ஊரடங்கு அமல், அக்.21 முதல் தொடக்க பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு வெளியீடு!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு அக்டோபர் 25ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக பெங்களூரு நகர காவல்துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

இந்தியாவில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது பண்டிகை தினங்கள் வரவுள்ள நிலையில் கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மறுபுறம் கொரோனா 3வது அலை அச்சம் நிலவுவதால் மாநில அரசுகள் தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டித்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருகிற அக்.25 வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு – அக்.21 கடைசி நாள்! தவறினால் அபராதம்!

தினசரி இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அக்டோபர் 11 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகிற அக்.21 முதல் தொடக்க பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பஸ்வராஜ் பொம்மை இறுதி முடிவெடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். மறுபுறம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொது இடங்களில் 4க்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூட அனுமதி அளிக்கப்படவில்லை.

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!

மாநில அரசுகள் பண்டிகை தினங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here