டெல்லியில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு விகிதம் 0.44% ஆக சரிவு!!

0
டெல்லியில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு விகிதம் 0.44% ஆக சரிவு!!

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு வீதமானது 1 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 316 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது நாடு முழுவதும் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதத்தில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சம் வரை பதிவு செய்து வந்த இந்தியாவில் தற்போது 90 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி பாதிப்புகள் குறைந்துள்ளது. கொரோனா 2 ஆம் அலையால் மஹாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பலத்த சேதங்களை சந்தித்தது. டெல்லியிலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக கொரோனா தினசரி பாதிப்பானது 30 ஆயிரத்துக்கும் அதிகமாக காணப்பட்டது.

CA தேர்வு ஆன்லைன் பயிற்சி கட்டணம் ரத்து – ஐசிஏஐ அறிவிப்பு!!

அந்த நோயாளிகளை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சையளிக்க போதுமான வசதி குறைவாக காணப்பட்டது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகளும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் டெல்லியில் மிக குறைவாகவே இருந்தது. இதனால் அதிகளவு கொரோனா தொற்று பலி எண்ணிக்கையானது டெல்லியில் பதிவு செய்யப்பட்டு வந்தது. அரசின் முயற்சியால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது ஒரு நாள் பாதிப்பு 300 வரை வீழ்ச்சி கண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் அடிப்படையில் டெல்லியில் தொற்று பாதிப்பு வீதமானது 0.44% ஆக குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 316 புதிய பாதிப்புகளும், 521 குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும், 41 இறப்பும் பதிவாகியுள்ளது. மேலும் டெல்லி முழுவதிலும் உள்ள 24,208 மருத்துவமனைகளில் 21,595 படுக்கைகள் காலியாக உள்ளது. நொய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 14,00,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு மையங்களில் 238 பேரும் வீடுகளில் 1,795 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர கடந்த 24 மணி நேரத்தில் 48,574 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதன் மூலம், பரிசோதனை வீதம் 1,98,93,804 ஆக உள்ளது. கூடுதலாக கடந்த 24 மணி நேரத்தில் 66,175 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதின் மூலம் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 57,32,699 ஆக அதிகரித்துள்ளது என டெல்லி சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!