CA தேர்வு ஆன்லைன் பயிற்சி கட்டணம் ரத்து – ஐசிஏஐ அறிவிப்பு!!

0
CA தேர்வு ஆன்லைன் பயிற்சி கட்டணம் ரத்து - ஐசிஏஐ அறிவிப்பு!!
CA தேர்வு ஆன்லைன் பயிற்சி கட்டணம் ரத்து - ஐசிஏஐ அறிவிப்பு!!
CA தேர்வு ஆன்லைன் பயிற்சி கட்டணம் ரத்து – ஐசிஏஐ அறிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தினால் சி.ஏ பயிற்சி பெறும் மாணவர்கள் சிலர் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது அந்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை ஐசிஏஐ அறிவித்துள்ளது.

ஐசிஏஐ இலவச வகுப்பு:

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் குழந்தைகள் தங்களது பெற்றோர்கர்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. தற்போது இது குறித்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் – கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு!

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ஐசிஏஐ நடப்பு மாதமான ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த சி.ஏ முதல் நிலை தேர்வு (Foundation) அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி சி.ஏ முதல் நிலை தேர்வு அடுத்த மாதம் 24, 26, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் சி.ஏ பயிற்சி பெறும் மாணவர்களை பாதுகாக்கும் வகையில் தென்மண்டல ஐசிஏஐ சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி பெற்றோர்களை இழந்து தவிக்கும் சிஏ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் சிஏ தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் இந்த வகுப்புகள் கட்டணம் இன்றி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!