விஜய் டிவி “குக் வித் கோமாளி கொண்டாட்டம்” நிகழ்ச்சி – வெளியான ப்ரோமோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி கொண்டாட்டம்" நிகழ்ச்சி - வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “குக் வித் கோமாளி கொண்டாட்டம்” நிகழ்ச்சி – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவியில் வருகிற ஞாயிறு மதியம் 3 மணிக்கு “குக் வித் கோமாளி கொண்டாட்டம்” நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக மீண்டும் குறையாத நகைச்சுவையுடன் கூடிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி ஆகும். மக்களிடம் அதிகம் வரவேற்ப்பை இந்த ஷோ பெற்றதால் அடுத்தடுத்து இரண்டு சீசன்கள் தொடங்கப்பட்டன. இரண்டாவது சீசன் தற்போது முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் சேட்டைக்கு சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகும். அந்த அளவுக்கு சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையையும் தரக்கூடியது இந்த நிகழ்ச்சி.

கார்த்தி & வசுந்தரா திருமணத்தை மறுத்து விடும் கோதை – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!!

இந்நிலையில் குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுகிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அனைத்து கோமாளிகளும், குக்குகளும் கலந்து கொள்கின்றனர். நடுவர்கள் ADVANTAGE டாஸ்க் கொடுக்கின்றனர். அதில் இதய வடிவில் தோசை சுட சொல்கின்றனர். கோமாளிகளின் கண்ணை கட்டிக் கொண்டு தோசை சுடும் காமெடி கலந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் ‘ரகிட ரகிட’ பாட்டிற்கு கோமாளிகளும், குக்குகளும் நடனம் ஆடியுள்ளனர். பழைய நிகழ்ச்சி போல மீண்டும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அனைத்து கோமாளிகளும் மாறுபட்ட கெட்அப் உடன் கலந்து கொண்டுள்ளனர். எனவே ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை எப்போ வரும் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!