விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 டிசம்பரில் தொடக்கம்? இணையத்தில் கசிந்த தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 டிசம்பரில் தொடக்கம்? இணையத்தில் கசிந்த தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 டிசம்பரில் தொடக்கம்? இணையத்தில் கசிந்த தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 டிசம்பரில் தொடக்கம்? இணையத்தில் கசிந்த தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், அநேகமாக டிசம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் இதன் லான்ச் எபிசோடு இருக்கும் எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

ஒரு சமையல் நிகழ்ச்சியில் பல்வேறு புதுமைகளை புகுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வைத்திருக்க கூடிய ஒரு முக்கியமான ஷோ ‘குக் வித் கோமாளி’. விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பான இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஆனது அதன் ரசிகர்களால் தான். என்னதான் இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும், இதன் ஷோ ஃபார்மேட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறியது இதனால் தான் – மனம் திறந்த நமீதா மாரிமுத்து! வைரலாகும் வீடியோ!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் மற்றும் கோமாளி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட பல வெற்றிகளை தந்திருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 3 எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 டிசம்பர் மாதம் 2வது வாரம் வெளியாகும் என ஒரு முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது.

இதற்கான ப்ரோமோ ஷூட்டிங் விரைவில் துவங்க இருப்பதாகவும் அந்த ப்ரோமோக்கள் நவம்பர் மாதத்தின் கடைசி அல்லது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களை தற்போது உற்சாகப்படுத்தி இருக்கிறது. இப்படி இருக்க ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 யின் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே ரக்ஷன் என்றும் வழக்கம் போல செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிகிறது.

இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்திய ‘ராஜா ராணி’ ஆல்யா மனசா – ரசிகர்கள் வாழ்த்து!

அதே நேரத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முக்கிய தூணாக இருக்கக் கூடிய கோமாளிகள் பலர் சினிமாவில் பிசியாக நடித்து வருவதால் அவர்கள் இந்த சீசனில் கலந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. என்றாலும் புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை போன்ற மக்களின் மனம் கவர்ந்த கோமாளிகள் இந்த சீசனிலும் இடம் பிடித்தால் நிச்சயம் இந்த சீசன் மிகப்பெரிய வெற்றியடையும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!