ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட முதல் பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!

0
ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட முதல் பதிவு - ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட முதல் பதிவு - ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட முதல் பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நடிகை விஜி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடன் போட்டியிட்ட 17 போட்டியாளர்களுக்கு நன்று கூறி வெளியிட்ட முதல் பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

சர்வைவர் நிகழ்ச்சி

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக துவங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த சர்வைவர் நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில், அதுவும் தமிழ் மொழியில் இதுவரை இல்லாதததொரு புதுமையாக ஒளிபரப்பானது தான் இந்த சர்வைவர் நிகழ்ச்சி. ஒரு தீவுக்குள் வசித்து வரும் பல்வேறு போட்டியாளர்கள் தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, மற்றவர்களுடன் போட்டி போடுவது தான் இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் சாராம்சம்.

சரவணனை சமையல் போட்டியில் தோற்கடிக்க அர்ச்சனாவின் திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இந்த மொத்த சர்வைவர் நிகழ்ச்சியும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்றது குறிப்பித்தக்கது. இப்படி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான போட்டிகளுடன் களம் கண்டு வந்த இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இதன் இறுதி நாள் போட்டிகள் நேற்று ஒளிபரப்பான நிலையில், இப்போட்டியின் வெற்றியாளராக நடிகை விஜயலட்சுமி அறிவிக்கப்பட்டார்.

இதற்காக நடிகை விஜயலட்சுமிக்கு ரூ.1 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது. இப்போது சர்வைவர் நிகழ்ச்சியை முடித்து தனது வீட்டுக்கு திரும்பியுள்ள நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அனைவரது அன்புக்கும் வாழ்த்துக்கள். இந்த அழகான நினைவுக்காக எனது 17 சக போட்டியாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன். இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்து நாங்கள் அனைவரும் எவ்வளவு போராடினோம் என்பது எனக்குத் தெரியும்.

TNPSC குரூப் 2 தேர்வில் 5831 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம்!

உங்களிடம் சொல்ல என்னிடம் பல சூப்பர் ஹீரோ கதைகள் உள்ளன. அந்த கட்டத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று நம்ப முடியவில்லை. என்னை ஊக்கப்படுத்திய அர்ஜுன் சாருக்கு நன்றி. அதனால் தான் சிறந்ததை கொடுக்க முடிந்தது. இந்த வாய்ப்பு அளித்ததற்கு ஜீ தமிழுக்கு நன்றி கூறுகிறேன். மேலும் இந்த நிகழ்ச்சியை உருவாக்க எங்களை விட அதிகமாக பாதிக்கப்பட்ட குழுவினருக்கும் ஒரு பெரிய நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!