தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை – மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை – மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,வகுப்பறைகள் செயல்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி அவர்கள் ஆய்வு செய்தார். இதனால் அரசு பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டாய விடுமுறை:

தமிழகத்தில் ஜனவரி 2 வது வாரத்தில் கொரோனா தினசரி தொற்று அதிகரித்தால் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால், பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றுவதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிப்ரவரி 7 முதல் 1 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!

இந்த பள்ளிக்கு நேற்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அப்பள்ளி ஆசிரியர் 16 பேர், பள்ளிக்கு தாமதமாக வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்வி அதிகாரி பூபதி, தாமதமாக வந்த 16 ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பினார்.மேலும் இது போன்று பள்ளிக்கு ஆசிரியர்கள் தாமதமாக வந்தால் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என எச்சரித்தார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!

இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பூபதி ஆய்வு நடத்தி விட்டு பள்ளி மாணவர்களுக்கு கணித வகுப்பு நடத்தினார். மேலும் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் சரியாக வருவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரி பூபதி அப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து,அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை கூறி பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வியில் உள்ளது. எனவே அதிகம் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!