கல்லூரி தேர்வுகள் ஹால் டிக்கெட்டில் நடந்த குளறுபடி – நிர்வாகம் அளித்த திடுக்கிடும் விளக்கம்!

0
கல்லூரி தேர்வுகள் ஹால் டிக்கெட்டில் நடந்த குளறுபடி - நிர்வாகம் அளித்த திடுக்கிடும் விளக்கம்!
கல்லூரி தேர்வுகள் ஹால் டிக்கெட்டில் நடந்த குளறுபடி - நிர்வாகம் அளித்த திடுக்கிடும் விளக்கம்!
கல்லூரி தேர்வுகள் ஹால் டிக்கெட்டில் நடந்த குளறுபடி – நிர்வாகம் அளித்த திடுக்கிடும் விளக்கம்!

பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையின் தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யும் போது அதில், மாணவர்களின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் தோனியின் புகைப்படங்கள் இருந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி தேர்வு:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசின் முக்கிய தேர்வுகளில் தேர்வர்கள் கலந்து கொள்ள ஹால்டிக்கெட் அவசியமாகும். இதற்கான விவரங்ளை மாணவர்களிடம் இருந்து பெற்று சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகள் ஹால்டிக்கெட்டை வெளியிடும். இதனால் தான் மாணவர்கள் ஒரு முறைக்கு பல முறை தங்களின் பெயர், வயது, முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். தற்போது, பீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தில் இணைத்துள்ள கல்லூரிகளுக்கான தேர்வுகளை நடத்தப்பட உள்ளது.

குறிப்பாக, பல்கலையுடன் இணைந்த 3 கல்லூரிகளில் உள்ள மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் சமீபத்தில் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது. அதில், சில மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் மாணவர்களது புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் போன்றவர்களின் படங்கள் உள்ளது. இந்த விஷயம் பல்கலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த ஹால்டிக்கெட்டின் புகைப்படங்களை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

இந்த பழைய ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா – அப்போ 2 லட்சம் ஜாக்பாட் பரிசு உங்களுக்கு தான்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, ஹால் டிக்கெட்டிற்கான விவரங்களை மாணவர்கள் தான் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது, சில மாணவர்கள் தான் தங்களது புகைப்படத்திற்கு பதிலாக, மற்றவர்களின் படங்களை பதிவேற்றி உள்ளனர். இந்த ஹால் டிக்கெட் விவகாரம் மிகவும் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தபட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் கல்லூரியின் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தேவைப்பட்டால் வழக்கும் பதிவு செய்யப்படலாம் என்று அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!