இந்திய குடியுரிமைக்கு இவர்களது ஒப்புதலே போதுமானது – வெளியான நியூ அப்டேட் இதோ!

0
இந்திய குடியுரிமைக்கு இவர்களது ஒப்புதலே போதுமானது - வெளியான நியூ அப்டேட் இதோ!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் மூலம் குடியுரிமை சான்றிதழை பெற உள்ளூர் பூசாரிகள், பாதிரியார்களின் ஒப்புதலே போதுமானது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய குடியுரிமை:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசானது புதிய 2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை வெளியிட்டது. இச்சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வெளியேறிய மதச்சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை பெற விரும்பும் நபர்கள் தங்களது மதத்தை உறுதிப்படுத்திக் கொள்ள உள்ளூர் பூசாரி அல்லது பாதிரியார்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.

TN HRMD தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

மேலும் இந்த ஒப்புதல் கடிதமானது உங்கள் மதத்தை உறுதிப்படுத்தும் வகையில் பூசாரி அல்லது பாதிரியாரின் கைப்பட காகிதத்தில் எழுதப்பட்ட கடிதமாக இருக்கலாம் அல்லது ரூ.10/- முத்திரை பதித்த பத்திரத்தில் எழுதப்பட்ட கடிதமாக இருக்கலாம். இந்த ஒப்புதல் கடிதம் இந்தியக் குடியுரிமை சான்றிதழை பெறுவதற்கான தகுதி ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமையை எளிதாக பெற இயலும் என்ற நோக்கத்துடன் இவ்விதிமுறை விதிக்கப்பட்டது என்று மத்திய அரசு கூறுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் தனியார் செய்தித்தாள் ஒன்று CAA தொடர்பான ஹெல்ப்லைன் எண் 1032-வை தொடர்வு கொண்டு பெற்ற செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!