விஜய் டிவியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – உற்சாகத்தில் நட்சத்திரங்கள்! ரசிகர்களுக்கு விருந்து!

0
விஜய் டிவியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - உற்சாகத்தில் நட்சத்திரங்கள்! ரசிகர்களுக்கு விருந்து!
விஜய் டிவியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - உற்சாகத்தில் நட்சத்திரங்கள்! ரசிகர்களுக்கு விருந்து!
விஜய் டிவியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – உற்சாகத்தில் நட்சத்திரங்கள்! ரசிகர்களுக்கு விருந்து!

விஜய் டிவியின் பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் என்றாலே ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பல சுவாரஸ்யங்கள் இருக்கும். இதனால் ரசிகர்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை மிகவும் ஆவலாக எதிர்பார்ப்பார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி:

சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் வார இறுதியில் வரும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேராதரவோடு சென்று வருகிறது. அதிலும் விஜய் டிவியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் வாரம் முழுவதும் ரசிகர்களுக்கு இருக்கும் அழுத்தத்தை குறைக்கும் வகையில், மிகவும் கலகலப்பாக இருக்கும். இதனால் வார இறுதி நாட்களில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதேபோல், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் சேனலில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும்.

சன் டிவி “ரோஜா” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 1000வது எபிசோட் கொண்டாட்டம்! ரசிகர்கள் வாழ்த்து!

தற்போது இந்த மாதத்தில் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா வர உள்ளது. இதனால் விஜய் டிவியில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல பிரபலங்களும் தங்கள் சமூக வலைத்தளங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் பல நாட்கள் கழித்து பாரதி கண்ணம்மா நடிகை ஃபரீனாவும் கலந்து கொண்டுள்ளார்.

Vijay TV Bigg Boss 5 Promo | கடுமையாகும் டாஸ்குகள்! நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்?

ஃபரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சினிமா பாடல் ஒன்றிற்கு ஃபரீனா, அவருடன் ராஜா ராணி 2 அர்ச்சனா, வேலைக்காரன் சீரியல் ஹீரோ, சூப்பர் சிங்கர் மானஸ்வி, கிரேஸ் கருணாஸ் இவர்கள் அனைவரும் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் ராமர் உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் குஷியாகி உள்ளனர். மேலும், இந்த வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!