தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – தலைமை செயலாளர் ஆலோசனை!

0
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை - தலைமை செயலாளர் ஆலோசனை!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை - தலைமை செயலாளர் ஆலோசனை!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு

நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. பலரும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தற்போது ரம்மி விளையாட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையில் மக்கள் தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் முதலீடு செய்து ஏமாந்து விடுகின்றனர். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர். இந்த விளையாட்டு மிகவும் அபாயகரமான உள்ளதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

அதே போல தமிழகத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் IIT தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், டாக்டர் லட்சுமி விஜயகுமார் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றனர். இவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து ஆய்வு செய்து தனது அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் செப்.8 உள்ளூர் விடுமுறை – இதற்காக தான்! முழு விவரம் இதோ!

அந்த அறிக்கையில் ஆன்லைன் விளையாட்டுகளால் பொது மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது, மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டால் திறன் மேம்படுகிறது என்று சொல்லப்படுவது தவறு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு வகையான கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!