செஸ் ஒலிம்பியாட்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியாவின் ரோனத் சத்வானி – குவியும் வாழ்த்துக்கள்!

0
செஸ் ஒலிம்பியாட்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியாவின் ரோனத் சத்வானி - குவியும் வாழ்த்துக்கள்!
செஸ் ஒலிம்பியாட்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியாவின் ரோனத் சத்வானி - குவியும் வாழ்த்துக்கள்!
செஸ் ஒலிம்பியாட்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியாவின் ரோனத் சத்வானி – குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை மகாபலிபுரத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆயிரக்கணக்கான செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், ஐக்கிய அமீரக வீரரை தோற்கடித்து இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதல் வெற்றி பதிவு

இந்தியாவில் முதன் முறையாக 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை மகாபலிபுரத்தில் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் வீராங்கனைகள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரைக்கும் இந்தியா 2014 ஆம் ஆண்டில் மட்டுமே பதக்கத்தை வென்றிருக்கிறது.

இனி 3.20 லட்சம் மருத்துவ கட்டணம் கட்ட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

ஆனால், இந்தாண்டு பல திறமையான வீராங்கனைகளை இந்தியா களமிறக்கியுள்ளது. மேலும், இந்த முறை இந்திய அணியின் வழிகாட்டியாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் கலந்துகொண்டுள்ளார். இன்று முதல் சுற்று ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணியின் சார்பில் பொது பிரிவில் 3 அணிகளும் பெண்கள் பிரிவில் 3 அணிகளுமாக மொத்தமாக 6 அணிகள் கலந்துகொண்டு ஆடினர். அதாவது, ஆறு வெவ்வேறு அணிகளை சேர்ந்த 30 வீராங்கனைகள் இந்தியா சார்பில் விளையாடுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில், ஐக்கிய அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்திய வீரரான ரோனத் சத்வானி வெற்றி பெற்றுள்ளார். அதாவது, ரோனத் சத்வானி வெள்ளைநிற காய்களுடன் களமிறங்கி தனது 36 ஆவது நகர்த்தலில் ஐக்கிய அமீரக வீரரை வென்றுள்ளார். அதாவது, ரோனத் சத்வானி ஓபன் பிரிவு பி அணியில் விளையாடி இந்தியாவின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், மற்ற 3 அணிகளும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவிற்கு 2 புள்ளிகள் கிடைக்கும் என்பதால் மற்ற அணிகளும் விளையாடினர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here