CSK Vs MI : மும்பை இந்தியன்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சென்னை! எதில் தெரியுமா?
இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போட்டிகளில் கலந்து கொண்டு வரும் 8 அணிகளும் சமூக வலைதளங்களில் தங்களுக்கு கணக்குகளை வைத்துள்ளது. அதில் அதிகளவு பாலோயர்களை சம்பாதித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
வலைதள கணக்கு
இந்திய நகரங்களின் 8 முக்கிய பெயர்களுடன் உலா வரும் 8 IPL அணிகளில் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இரண்டு முக்கிய அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இந்த 8 அணிகளுக்குமே ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தாலும், சென்னை மற்றும் மும்பை அணிகள் இரண்டும் அதன் ரசிகர்களுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். ஒவ்வொரு ஆண்டு IPL போட்டிகள் துவங்கியதுமே இந்த இரு அணி ரசிகர்களுக்கு இடையே நடைபெறும் சிறு சிறு மோதல்கள் துவங்கிவிடும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா – 354 பேர் உயிரிழப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தளவு, டோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட பல இந்திய நட்சத்திர வீரர்களின் அணிவகுப்பு காணப்படும். இதில் தமிழ்நாட்டு மக்கள் அன்புடன் ‘தல’ என்று அழைக்கும் டோனி எப்போதுமே ஸ்பெஷல் தான். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டிகளில் 14 ஆவது சீசனில் களம் கண்டு வருகிறது. அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியமாகும்.
என்னவென்றால் தமிழகத்தில் CSK அணிக்கு உள்ள அதே அளவு ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் உள்ளனர் என்றால் மிகையாகாது. இதுவரை 4 IPL கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ள மும்பை அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படக்கூடிய சச்சின் ஒரு முன்னாள் வீரராக பங்காற்றி இருந்தது கூடுதல் சிறப்பு.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள 8 IPL அணிகளுக்கான அதிகாரப்பூர்வ கணக்கில் சுமார் 8 மில்லியன் ரசிகர்களின் பேராதரவை பெற்று CSK அணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் 7.5 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்ட மும்பை அணி 2 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் வழக்கம் போல மும்பை அணியை முந்திய களிப்பில் CSK ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். இதனிடையே வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கவுள்ள IPL போட்டிகளில் ஆரம்பத்தில் காலம் இறங்கும் மும்பை மற்றும் சென்னை அணிகளின் ஆட்டத்தில் மீண்டும் ரசிகர்களின் செல்ல மோதலை காண முடியும்.