சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி – ஜூன் 25 முதல்!
கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளினால் சென்னை நகரின் புறநகர் மின்சார ரயில்கள் நாளை முதல் இயங்கும் என்றும், அதில் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் அனுமதி:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால் பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. தொழில்களும் மூடப்பட்டதால் மக்களுக்கு போக்குவரத்து பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை. அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசிய துறையினர் பயணிப்பதற்காக மட்டும் மிக குறைந்த எண்ணிக்கையிலான மின்சார ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்பட்டது.
ஜூலை 31க்குள் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியீடு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தற்போது தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்த அளவிலேயே உள்ளது. இதனால் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிக அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பேருந்துகள் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்பட்டு வரும் நிலையில், நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் நாளை முதல் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம், ஆண்கள் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையும் இரவு 7 மணி முதல் கடைசி ரயில் வரை பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வளாகம் மற்றும் ரயில்களுக்குள் முகக்கவசம் அணியாமல் உள்ளவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TN Job “FB
Group” Join Now
ரயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் கூட்டத்தை தவிர்க்குமாறும், போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை அதிகாரிகள் சோதிக்கும் போது உரிய ஒத்துழைப்பு தரும்படியும் கூறப்பட்டுள்ளது.