சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – IFSC கோடுகள் மாற்றம்!

0
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - IFSC கோடுகள் மாற்றம்!
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - IFSC கோடுகள் மாற்றம்!
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – IFSC கோடுகள் மாற்றம்!

ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியின் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால், சிண்டிகேட் வங்கியின் IFSC குறியீடுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

IFSC கோடுகள் மாற்றம்

கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளுடன் சிறிய வங்கிகளை இணைப்பதாக அறிவித்திருந்தார். அதன் படி சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கிளையின் IFSC குறியீட்டை ஜூன் 30 க்குள் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிண்டிகேட் வங்கியின் பழைய MCIR மற்றும் IFSC கோடு, காசோலை புத்தகம் ஜூன் 30 அதாவது இன்று வரை மட்டுமே செல்லுபடியாகும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கல் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய IFSC குறியீடுகள் SYNB க்கு பதிலாக CNRB உடன் தொடங்கும். அதனால் இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள IFSC குறியீடு எண்ணில் 10000 ஐ சேர்க்க வேண்டும். இந்த புதிய IFSC குறியீடுகளை canarabank.com/IFSC.html என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது கனரா வங்கி கிளைகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இது தவிர, கனரா வங்கியின் வாடிக்கையாளர் சேவையையும் 18004250018 என்ற எண்ணில் பெற்றுக்கொள்ளலாம்.

9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை – அரசாணை வெளியீடு!

இது தவிர NEFT, RTGS அல்லது IMPS வழியாக பண பரிமாற்றம் செய்யும் போது CNRB என்று துவங்கும் புதிய IFSC குறியீட்டை மட்டுமே பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் தற்போதைய ஸ்விஃப்ட் குறியீட்டை நிறுத்துவதாகவும் கனரா வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக வங்கிகளின் இணைப்புக்கு பிறகு IFSC மற்றும் MICR குறியீடுகள் 2022 நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து புதுப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!