WhatsApp செயலியின் வீடியோ கால் அம்சத்தில் மாற்றம் – புதிய வெளியீடு!

0
WhatsApp செயலியின் வீடியோ கால் அம்சத்தில் மாற்றம் - புதிய வெளியீடு!
WhatsApp செயலியின் வீடியோ கால் அம்சத்தில் மாற்றம் - புதிய வெளியீடு!
WhatsApp செயலியின் வீடியோ கால் அம்சத்தில் மாற்றம் – புதிய வெளியீடு!

வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் ஒரு புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஆப்பிள் iOS பீட்டா பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கில் புதிய பயனர் இடைமுகத்தையும், குழு அழைப்புகளுக்கான புதிய அம்சத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய அம்சம்

உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் தனது பீட்டா பயனர்களுக்கு புதியதொரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் ஆப்பிள் iOS பீட்டா பயனர்கள் வாட்ஸ்அப் சேட்டில் புதிய பயனர் இடைமுகத்தை (New User Interface) பெற உள்ளனர். இது தொடர்பாக WaBetaInfo பகிர்ந்த சில தகவல்களின் அடிப்படையில், இந்த புதிய இடைமுகம் ஆப்பிள் மொபைல் போனில் உள்ள ஃபேஸ்டைம் பயன்பாட்டில் காணப்பட்டதைப் போலவே இருக்கிறது.

தமிழக அரசு அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வழங்குவதில் சிக்கல்!

இது தவிர வாட்ஸ் அப் பயனர்கள், கால் செய்யும் போது தவறவிட்ட சில நபர்களை மீண்டும் அழைப்பில் இணைக்கிறது. இதற்கான ஒரு சிறப்பு அம்சமாக திரையின் கீழ் ஒரு ரிங் பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது குழு அழைப்பில் (Group Call) நீங்கள் யாராவது ஒருவரை சேர அழைக்கும் போது, அவர்களால் அந்த நேரத்தில் சேர முடியாத பட்சத்தில், அந்த அழைப்பு முடிவடையாவிட்டால், அடுத்த முறை நீங்கள் வாட்ஸ் அப்பை திறக்கும் போது அவர்களுடன் சேர்ந்து கொள்ள முடியும்.

TN Job “FB  Group” Join Now

அதற்காக கால் செக்சனை தேர்ந்தெடுக்கும் போது, அந்த வீடியோ காலின் கீழ் தோன்றும் Tap to Join என்பதை கிளிக் செய்தால் குழு அழைப்புடன் ஒருவர் இணைந்து கொள்ள முடியும். தற்போது, இந்த புதிய அம்சம் iOS பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது விரைவில் Android பீட்டா சோதனைக்கு உட்பட்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது தான் துவங்கியிருப்பதால், வரும் நாட்களில் அதை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!