தமிழக அரசு அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வழங்குவதில் சிக்கல்!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள 50 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பத்தில் பிழை உள்ளதால் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கோவில்களில் தற்காலிக பணியிடங்களில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இன்னும் 1 மாதத்தில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவில் உட்பட 29 உப கோவில்களில் தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுனர், கடைநிலை ஊழியர், இரவு காவலர், ஓதுவார், வேதபாராயணம், தீவட்டி, நாதஸ்வரம், மேளம், மிருதங்கம், தாளம், சுருதி, புஜங்கம், டமாரம், பரிச்சாரகர், சன்டோல் மற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட மொத்தம் 50 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
இதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று முருகன் கோவில் நிர்வாகம் பணியிடங்கள் குறித்த விவரம் அடங்கிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் நேற்று முதல் முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெற 150க்கு மேற்பட்டோர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது நிர்வாகம் தரப்பில் மதியத்திற்கு மேல் வழங்கப்படும் என தெரிவித்து காக்க வைத்தனர். ஆனால் மாலை 5 மணி வரை காத்திருந்தும் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை.
TN Job “FB
Group” Join Now
இதனால் கடைசி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாக அதிகரிகளிடம் கேள்வி எழுப்பிய போது, கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க திட்டமிட்டோம். ஆனால் விண்ணப்ப படிவத்தில், பிழை ஏற்பட்டதால் விண்ணப்பம் அச்சடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் பெற வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.