ஆன்லைன் வழிக்கல்வி மாணவர் சேர்க்கை – அழகப்பா பல்கலைக்கு சான்று!!
கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது அழகப்பா பல்கலைக்கழகம். இப்பல்கலை அதிகளவிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்து வருகிறது. இதனை முன்னிட்டு தற்போது அந்த பல்கலைக்கழகத்திற்கு சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கல்வி:
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தல் மற்றும் தேர்வு நடத்துதல் ஆகியவற்றை ஆசிரியர்கள் செய்து வந்தனர்.
TN Job “FB
Group” Join Now
தற்போது கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால் மீண்டும் ஆன்லைன் கல்வி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் அமைப்பு என்ற இணையவழி கற்றல் திட்டம் நடைமுறையில் உள்ளதால் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலை கடந்த 2017ம் ஆண்டு முதல் ‘ஸ்வயம்’ என்னும் இணையவழி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது. இந்த இணையத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களை தேர்வு செய்து கற்று வருகின்றனர்.
சென்னையில் தீவிரமடையும் கொரோனா – 600 கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிப்பு!!
அந்த வகையில் ஆன்லைன் மூலம் அதிக அளவிலான மாணவர்களுக்கு இப்பல்கலை கற்பித்து வருகிறது என்று தேசிய மேம்பாட்டு தொழில்நுட்ப குற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்காக அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தனது பாராட்டை தெரிவித்தார்.