மத்திய அரசின் கல்வி உதவித்தொகை – சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

0
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை – சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசானது சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை பெற ஆனவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

மாணவர்களுக்கு உதவும் வகையில் Scholarship எனபடும் உதவித்தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகளுக்கென பல்வேறு Scholarship வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குவதும் ஒன்றாகும். மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகையானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவ-மாணவிகள் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த உதவித்தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://scholarships.gov.in/ என்னும் மத்திய அரசின் வலைதளத்தில் சென்று போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!