நாடு முழுவதும் 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்!

0
நாடு முழுவதும் 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்!
நாடு முழுவதும் 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்!
நாடு முழுவதும் 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் இன்று மாலை நிலவரப்படி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை விவரங்களின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி :

கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றின் பாதிப்பினால் மக்கள் கொத்துக்கொத்தாக பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சியின் விளைவால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டது. முதலில் உற்பத்தி குறைபாடு காரணமாக முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. முதன்முதலில் ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.

செப்.17 முதல் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!

இந்நிலையில், மத்திய அரசு இன்று மாலை 7 மணி நிலவரப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 – 44 வயதுக்கு இடையில் உள்ளவர்கள் 30,58,59,611 முதல்தவனை தடுப்பூசியும், 4,69,45,312 இரண்டாம் தவணை தடுப்பூசியும், செலுத்தி கொண்டுள்ளனர். 45 – 59 வயதுக்கு இடையில் உள்ள 14,54,51,999 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6,43,17,504 இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேல் 9,41,15,941 முதல் தவணை தடுப்பூசியும், 5,00,24,916 இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சுகாதாரத்துறையில் உள்ளவர்களில் 1,03,65,012 முதல் தவணை தடுப்பூசியும், 86,26,343 இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள் 1,83,39,398 டோஸ் கொரோனா தடுப்பூசியும், 1,41,53,295 இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 75,81,99,331 டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here