CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – எப்போது? முழு விவரம் இதோ!

0
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 - எப்போது? முழு விவரம் இதோ!

CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) CBSE 10 ஆம் வகுப்பு முடிவை விரைவில் வெளியிட உள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbse.gov.in இல் என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் இருந்து அறிந்து கொள்ளலாம். CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 2024க்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு அலர்ட்.. இந்த பில் கட்ட மார்ச் 31 கடைசி நாள் – மீறினால் நடவடிக்கை!

CBSE முடிவுகளைச் சரிபார்க்க 5 மாற்று வழிகளை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் முதலாவதாக cbse.gov.in மற்றும் cbseresults.nic.in என்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தங்களின் ரோல் எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு ஐடி போன்ற உள்நுழைவு சான்றுகளை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அல்லது மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் சென்று அவர்களின் மதிப்பெண்கள் என்ன என்பதைக் கண்டறியலாம். அல்லது மாணவர்கள் பதிவிட்ட மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பப்படும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!