கடலூர் மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்து சேவைக்கு தடை – போக்குவரத்து கழக உத்தரவு!!

0
கடலூர் மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்து சேவைக்கு தடை – போக்குவரத்து கழக உத்தரவு!!

கடலூர் மாவட்டத்தில் இன்று போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையிலான போராட்டத்தின் விளைவாக மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்க தடைவிதித்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்து சேவைகள் தடை:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் ஏராளமானோர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கும் லீவு!

அப்போது போராட்டக்காரர்கள் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அன்புமணி ராமதாஸ் அவர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழக போக்குவரத்து கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர் கிராம பகுதிகளில் இரவு பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்படுவதாகவும், வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயங்கும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!