சென்னையில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – பேருந்து நிலையங்கள் விபரம்!

0
சென்னையில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு - பேருந்து நிலையங்கள் விபரம்!
சென்னையில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு - பேருந்து நிலையங்கள் விபரம்!
சென்னையில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – பேருந்து நிலையங்கள் விபரம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளன. அதற்கு ஏதுவாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள்:

தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருக்கும் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதற்காக பொதுமக்கள் பேருந்துகளில் 1 மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வர். அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிக்கைகாக தமிழக அரசு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளன. இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் குழந்தைகளின் நலன் கருதி 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விடுமுறை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மினி ஊரடங்கு, ஜன.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் அறிவிப்பு!

இதற்கிடையில் சென்னையில் இருந்து இன்று முதல் 13ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறையின் அடிப்படையில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு போக்குவரத்து நிலையங்கள் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) முழு ஊரடங்கு ரத்து? அரசுக்கு முக்கிய கோரிக்கை!

மாதவரம் பேருந்து நிலையம், கே.கே. நகர் பேருந்து நிலையம் , தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்கள் ஆகும். இந்த வகையில் பயணிகள் வசதிக்காக  www.tnstc.in  TNSTC செயலி மற்றும் தனியார் முன்பதிவு இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் . இதனை தொடர்ந்து 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படும். பேருந்துகளின் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் மற்றும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044 24749002 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகார் கொடுக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!