BPNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.35,000/- ஊதியம்..!

0
BPNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.35,000/- ஊதியம்..!
BPNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.35,000/- ஊதியம்..!
BPNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.35,000/- ஊதியம்..!

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Regional Manager, District Manager, Tehsil Manager & Executive Manager E Commerce பதவிக்கு என மொத்தமாக 747 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharatiya Pashupalan Nigam Limited (BPNL)
பணியின் பெயர் Regional Manager, District Manager, Tehsil Manager & Executive Manager E Commerce
பணியிடங்கள் 747
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BPNL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Regional Manager பணிக்கு 17 பணியிடம், District Manager பணிக்கு 66 பணியிடம், Executive Manager E Commerce பணிக்கு 04 பணியிடம் மற்றும் Tehsil Manager பணிக்கு 660 பணியிடம் என மொத்தமாக 747 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

BPNL கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது டிகிரி ஆகியவற்றில் பணிக்கு தேவையான ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கல்வித் தகுதி குறித்து முழுமையான விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

BPNL வயது வரம்பு:

Regional Manager பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது 25 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.

BPNL ஊதிய விவரம்:
  • Regional Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.35,000/- வழங்கப்படும்.
  • District Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.25,000/- வழங்கப்படும்.
ExamsDaily Mobile App Download
  • Tehsil Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.20,000/- வழங்கப்படும்.
  • Executive Manager E Commerce பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.15,000/- வழங்கப்படும்.
BPNL விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் விண்ணப்ப கட்டணம் கீழுள்ளவாறு வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

  • Regional Manager பணிக்கு ரூ.944/-
  • District Manager பணிக்கு ரூ.826/-
  • Tehsil Manager பணிக்கு ரூ.708/-
  • Executive Manager E Commerce பணிக்கு ரூ.826/-
BPNL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

BPNL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து 10.05.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையலாம்.

Download BPNL Notification

BPNL Online Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!