Bank of Baroda வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Bank of Baroda வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Bank of Baroda வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Bank of Baroda வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Agriculture Marketing Officers, Assistant Vice President பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda (BOB)
பணியின் பெயர் Agriculture Marketing Officers, Assistant Vice President
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BOB காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Agriculture Marketing Officers, Assistant Vice President பணிகளுக்கு என கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Assistant Vice President – Various
  • Agriculture Marketing Officers – 26
BOB கல்வி விவரங்கள்:

Assistant Vice President பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Graduate, Post Graduate Degree / Diploma, CA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

Agriculture Marketing Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Degree, Post Graduate Degree/ Diploma, MBA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

BOB பணி அனுபவம்:

Assistant Vice President பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் Public / Private / Foreign Banks / in Sales / Relationship Management in Cash Management Services பிரிவுகளில் அல்லது B2B / B2C Payment Company in Corporate / Bank sales roleகளில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

Agriculture Marketing Officers பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 3 ஆண்டு வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் marketing and generating lead in Agriculture and Allied Industries business in BFSI Sector பிரிவுகளில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

BOB வயது வரம்பு:

01.07.2022 அன்றைய நாளின் படி, Assistant Vice President பணிக்கு 26 வயது முதல் 40 வயது வரையும், Agriculture Marketing Officers பணிக்கு 25 வயது முதல் 40 வயது வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

BOB ஊதிய தொகை:

Assistant Vice President பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Agriculture Marketing Officers பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.15 லட்சம் முதல் ரூ.18/- லட்சம் வரை ஆண்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BOB தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

BOB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தகுதி வாய்ந்த பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

BOB  Agriculture Marketing Officers  Notification

BOB  Agriculture Marketing Officers  Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!